முக்கியமான ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டாமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முக்கியமான ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டாமா?

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (45)
Share
மத்திய அரசு, அனைத்து துறைகளிலும், மூர்க்கத்தனமாக, ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், ஹிந்தியை அலுவல் மொழியாக, வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில், அதற்கென்று தனியாக, ஹிந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது - ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ'மாநிலங்களில் உள்ள, மத்திய அரசு
வைகோ, ம.தி.மு.க., பா.ஜ., வானதி சீனிவாசன், தமிழக காங்கிரஸ், அழகிரி, விக்கிரமராஜா, அமைச்சர், மணியன்

மத்திய அரசு, அனைத்து துறைகளிலும், மூர்க்கத்தனமாக, ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், ஹிந்தியை அலுவல் மொழியாக, வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில், அதற்கென்று தனியாக, ஹிந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது - ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'மாநிலங்களில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள், முக்கியமான ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் காலம் காலமாக செய்யப்படுகின்றன...' என, சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.மொழி அரசியல் மூலமாக, அரசியலில் பதவி சுகத்தை அனுபவித்து, அதிகாரத்தை ருசித்த, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், அரை நுாற்றாண்டாக மக்களை ஏமாற்றி விட்டன. ஹிந்தி படிக்க மாட்டோம் என்று கூறலாம். ஆனால், வேறு ஒரு மொழி கற்பதை தடுக்கக் கூடாது - பா.ஜ., மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன்


'நீங்கள் சொல்லும் கட்சியின் இரட்டை வேடத்தை, தமிழக மக்கள் நன்கு அறிய துவங்கி விட்டனர்; அவர்களின் வேஷம், இனி எடுபடாது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.தமிழகத்தில், மத்திய அரசு அலுவலரை நியமிக்கும் போது, தமிழ் மொழி தெரியாத, ஹிந்தி மொழி மட்டும் தெரிந்தவரை, அலுவலராக நியமிப்பதை, மத்திய அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை என்றால், மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி


latest tamil news

'டில்லிக்கு போய், காங்., தலைவர்கள் ராகுல், சோனியாவை சந்திக்கும் போது, 'முஜே ஹிந்தி நஹி மாலும்; இங்கிலீஷ் மே போலோ...' என, உங்களால் சொல்ல முடியுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழக அரசு, இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. விவசாயிகளுக்கான, பிரதமர் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகிறது; தவறிழைத்தவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன்


'அடடா... எவ்வளவு அரிய, புதிய தகவல்களை கூறுகிறீர்கள்...' என, 'பாராட்ட' தோன்றும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன் பேட்டி.பொதுநலன் கருதி, அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதை, வணிகர்கள், மக்கள் தவறாக பயன்படுத்திவிடாமல், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட, அரசு கூறும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா


'எத்தனை முறை கூவினாலும், மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை; முக கவசம் அணிவதே இல்லை; குறிப்பாக, வர்த்தகர்கள் இவற்றை பின்பற்றுவதில்லை....' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X