பொது செய்தி

இந்தியா

விமானப்படையில் இணைந்தது ரபேல்

Added : செப் 10, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இன்று(செப்.,10) இன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்பட்டன.ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்பட்டன. நிகழ்ச்சியில்

புதுடில்லி: பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இன்று(செப்.,10) இன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்பட்டன.



latest tamil news


ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்பட்டன.


latest tamil news


நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகித்தனர். அவர்கள் முன்னிலையில், முதலில் விமானங்களுக்கு, அனைத்து மத பூஜை நடந்தது. பின்னர் விமானப்படை வீரர்களின் சாகசம் நடந்தது. தொடர்ந்து, விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. விமானப்படை தளபதிபதாரியா, பாதுகாப்பு செயலர் அஜய் குமார் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


latest tamil news



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டில்லி வந்த பிரான்ஸ் அமைச்சர் புளோரன்சுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சரும் விமானம் மூலம் டில்லியில் இருந்து அம்பாலா சென்றடைந்தனர்.


latest tamil news


இந்த விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
10-செப்-202017:51:19 IST Report Abuse
Subramanian வாழ்த்துகள். வாழ்க பாரதம்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-202013:54:17 IST Report Abuse
Janarthanan பத்து வருஷமாக வெறும் பேப்பரில் மட்டுமே ரபிலே வாங்க போறோம் என்று விமான படையை ஏமாற்றி கொண்டு இருந்தது முந்திய ஆட்சி ???? எல்லா சைனீஸ் ஒப்பந்தம் பண்ண வேலையோ என்னமோ ???
Rate this:
Cancel
10-செப்-202013:12:06 IST Report Abuse
ஆரூர் ரங் ராணுவத்தில் எல்லா மதத்தின் போதகர்களுக்கும் பணியுண்டு. ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X