கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டேன்: டிரம்ப்

Added : செப் 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரசின் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் பாப் உட்வர்ட்டிடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றை கையாண்ட விதம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வருகிற 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்,
Trump, BobWoodward, Book, CoronaVirus, டிரம்ப், பாப் உட்வர்ட், புத்தகம், கொரோனா, குறைத்து, மதிப்பிட்டேன்

வாஷிங்டன்: கொரோனா வைரசின் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் பாப் உட்வர்ட்டிடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றை கையாண்ட விதம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வருகிற 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்புத்தகத்தில் இருக்கும் சில தகவல்களை சி.என்.என் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், கடந்த டிசம்பர் முதல் ஜூலை மாதம் வரையில் பாப் உட்வர்ட்டிடம் டிரம்ப் பேசியது இடம் பெற்றுள்ளது.


latest tamil news


பாப் உட்வர்டிடம் டிரம்ப் கூறியதாவது: கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவில் இருந்து வெற்றி பெறுவேன். கொரோனா வைரசின் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டேன். நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். மக்கள் பயப்படுவதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டையோ அல்லது உலகத்தையோ வெறித்தனமாக விரட்டப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையைக் காட்ட விரும்புகிறோம்; ஒரு தேசமாக வலிமையைக் காட்ட விரும்புகிறோம்.

நான் ஒரு அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இது இதற்கு முன்னர் இந்த நாட்டில் யாரிடமும் இல்லாத ஆயுத அமைப்பாகும். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் என யாரும் எதிர்பார்க்காத, இதற்கு முன்னர் கேள்விப்படாத விஷயங்கள் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-செப்-202008:54:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni பல லக்ஷம் பெற சாவடிச்சாக பிணங்களை ஆளில்லா தீவிலே தூக்கிகடாசினாக யு எஸ் ஏ லே அவ்ளோகோரமா தாண்டவமாடிருக்கே காரோண என்ற கோவிட19 அப்படியும்கூட இறக்கமேயில்லாமல் பேசும் இவனெல்லாம் ப்ரெசிடெண்டா இல்லீங்க ...கழுகுகளேதான்
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
10-செப்-202018:28:59 IST Report Abuse
Loganathaiyyan அம்மாடி இவ்வளவு நாள் கழிச்சி இந்த ஞானோதயமா???பேஷ் விளங்கிடும் உமது நாடு உமது ஆட்சியில்????
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-202013:22:33 IST Report Abuse
Janarthanan சப்பை மூக்காரனும் /WHO சேர்ந்து இந்த நிலைமைக்கு கூட்டு கொண்டு வந்து விட்டார்கள் ????அவங்க உண்மையை மறைத்தன் விளைவு .... பரவின பிறகு ஊர் அடங்கு /மாஸ்க் /இடைவெளி /முதலில் காற்றில் பரவாது /பின்பு காற்றில் பரவுகிறது இப்படி ஆரம்பத்தில் இருந்து விதிமுறைகள் குழப்பம் தான் ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X