பொது செய்தி

இந்தியா

ரபேல் மூலம் உலக நாடுகளுக்கு முக்கிய செய்தி: ராஜ்நாத்

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Indian Air Force,Indian Air Force, Rafale, rajnathsingh, rajnath, defence minister, france, india,

அம்பாலா: ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதன் மூலம், நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் உட்பட உலக நாடுகளுக்கு முக்கியமான மற்றும் வலிமையான செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


விமானப்படையில் ரபேல்

பிரான்ஸ் நாட்டிடம் வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தலத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரான்ஸ் கலந்து கொண்டனர்.


latest tamil news





வலிமையான செய்தி

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது : ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது, இந்தியா - பிரான்ஸ் இடையிலான வலிமையான உறவை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய உறவு வலுப்பெற்றுள்ளது. ரபேல் இணைப்பு மூலம், நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் உட்பட உலக நாடுகளுக்கு முக்கிய மற்றும் வலிமையான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. நமது எல்லையில் நிலவும் சூழ்நிலை அல்லது உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த விமானம் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.


latest tamil news




உறுதி

சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது என தெரிவித்தேன். எந்த சூழ்நிலையிலும், நமது இறையாண்மை பிராந்திய ஒற்றுமையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதை அனைவருக்கும் தெரியபடுத்தியுள்ளோம். இதற்கான அனைத்து சாத்தியங்களையும் செய்ய உறுதியேற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


புது சகாப்தம்


latest tamil news


பின்னர் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பேசுகையில், இன்று நமது நாடுகள் பெரிய சாதனை படைத்துள்ளது. இரு நாட்டு புது உறவில் நாம் புதிய சகாப்தத்தை படைத்துள்ளோம். சர்வசேத விநியோக சங்கிலியில், இந்திய உற்பத்தியாளர்களின் பங்களிப்பு இடம்பெற மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கிறது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-செப்-202013:32:24 IST Report Abuse
Vijay D Ratnam கான் கிராஸ் மாஃபியாவின், சீன கைக்கூலி கட்சி உண்டியல் கபோதிகளின் வயிற்றெரிச்சலை வாரிக்கொட்டி கொள்வதே இவங்களுக்கு வேலையா பூடிச்சி.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
10-செப்-202013:19:05 IST Report Abuse
S. Narayanan இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது. மேலும் வளர்ந்து ஒரு நாள் வல்லரசுநாடாகும் நாள் தூரத்தில் இல்லை,
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-செப்-202012:29:13 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் அதேநேரத்தில் ஜனநாயகம் என்ற போர்வையில் தவறானவர்கள் கைகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கும் சுதந்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X