பொது செய்தி

இந்தியா

இந்திய விமானப்படையில் ரபேல் - நெட்டிசன்கள் டிரெண்டிங்

Updated : செப் 11, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Rafale, Ambala, Indian Air Force, ரபேல், இந்தியவிமானப்படை, அம்பாலா, ராஜ்நாத்சிங்,

புதுடில்லி: பிரான்ஸிலிருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இன்று(செப்.,10) முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணைக்கப்பட்டன. இதை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்தது. முதற்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தன. இந்த விமானங்கள் முறைப்படி இந்திய விமான படையில் இணையும் நிகழ்வு ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

அனைத்து மத பூஜைகளுடன் நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர் ரபேல் போர் விமானங்களை இயக்கி இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கி சாகசம் படைத்தனர்.


latest tamil news




ரபேல் விமானம் அதிகபட்சமாக 2,450 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது. இதன் சிறப்பு அம்சமே எதிரிநாட்டினரின் ரேடாரிலிருந்து தப்பக் கூடியது. 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தகர்க்க கூடிய திறன் இதில் உள்ளது. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டதன் மூலம் நமது ராணுவத்தின் பலம் அதிகமாகி உள்ளது. இதன்காரணமாக இன்று காலை முதலே ரபேல் தொடர்பான #Rafale, #Ambala, #Indian Air Force போன்ற ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-செப்-202013:06:48 IST Report Abuse
S. Narayanan வாழ்த்துக்கள். ராணுவ வளர்ச்சி நாட்டு வளர்ச்சி.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11-செப்-202011:58:46 IST Report Abuse
Nallavan Nallavan இதையும் கிண்டல் பண்ணி வெறுப்புணர்வுடன் குரூரமா ரசிக்கும் ஒரு கும்பலு இருக்கு .... அது எந்த கும்பலுன்னு சொல்ல தேவையில்லை ..........
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
10-செப்-202015:44:35 IST Report Abuse
sundarsvpr சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அதுபோல் நாட்டிற்கு ராணுவ பலம் தேவை.. ஆயுதம் மட்டும் பலம் இல்லை. ராணுவ நடவடிக்கையை தான்தோன்றித்தனமாய் விபரீதத்தை நினைக்காமல் விமர்சனம் செய்வது ராணுவ ரகசியம் கசிவதை விட ஆபத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X