மெரீனா கடற்கரையை திறந்துவிடுங்கள்

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement




latest tamil news


எளியவர்களின் சந்தோஷத்திற்கு வழிவிடுங்கள்
மெரீனா கடற்கரையை திறந்துவிடுங்கள்


latest tamil news




ஏழை எளிய மக்கள் செலவு இல்லாமல் சந்தோஷப்படும் இடமான சென்னை மெரீனா கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதித்து அவர்களின் சந்தோஷத்திற்கு வழிவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


latest tamil news


Advertisement


கொரோனா தளர்வு காரணமாக முழுக்க ஏசியால் நிரப்பப்பட்ட மால்கள்,மெட்ரோ ரயில்கள் கூட இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் திறந்த வெளியும் காற்று நிறைந்த பகுதியும் எவ்வளவு மக்கள் வந்தாலும் நெரிசல் இல்லாமல் சமூக இடைவெளி கடைப்பிடிக்ககூடிய இடமுமான கடற்கரையை மட்டும் ஏன் இன்னும் திறந்துவிடவில்லை என்பது புரியவில்லை.


latest tamil news




எம்ஜீஆர் சமாதி துவங்கி பட்டினப்பாக்கம் அணுகுசாலை வரை கம்புகளை கட்டியும் இரும்பு தடுப்புகளை நிறுத்தியும் போலீஸ் காவல் போட்டும் யாரும் கடற்கரைக்கு வராமல் தடுத்துள்ளனர்.


latest tamil news



பட்டினப்பாக்கம் அணுகுசாலை அருகே கலங்கரை விளக்கம் பின்பக்கத்தில் மட்டும் போனால் போகிறது என்று போலீசார் கண்டு கொள்ளாமல் விடுவதால் கொஞ்சம் பொதுமக்கள் குழந்தைகளோடும் குடும்பத்தோடும் வந்து சந்தோஷமாக கடல் அலையில் விளையாடிவிட்டும் கடற்கரையில் உட்கார்ந்துவிட்டும் செல்கின்றனர்.


latest tamil news



இவர்களின் இந்த சந்தோஷத்தை முறையாக எல்லோரும் அனுபவிக்க அரசு கடற்கரையை உடனே திறந்துவிட வேண்டும்.


latest tamil news



-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-செப்-202012:05:36 IST Report Abuse
Bhaskaran டமாரசெவிடன் காதில் ஊதும் சங்குதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X