பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் அறக்கட்டளை வங்கி கணக்கில் மிகப்பெரிய மோசடி

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
அயோத்தி: ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கோவில் கட்டுமான பணிகளைக் கவனித்துக் கொள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த
RamMandir_Trust, HugeAmount, Withdrawn, Fraudulently, BankAccounts, FIR, Registered, ராமர் கோவில், அறக்கட்டளை, போலி காசோலை, பணம், மோசடி, வங்கிக்கணக்கு

அயோத்தி: ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கோவில் கட்டுமான பணிகளைக் கவனித்துக் கொள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நிதியளித்து வருகின்றனர். கடந்த மாதம் வரை ரூ.30 கோடிக்கும் அதிகமாக நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டப்பட்டு, பூமி பூஜையுடன் கோவில் கட்டுமான பணிகள் துவங்கின. இந்நிலையில், அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news


போலி காசோலைகளைப் பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் இரண்டு முறை பணம் எடுத்ததாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க முயன்றபோது, ​​ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தொலைபேசியில் காசோலையைத் திரும்ப பெறுவது குறித்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடி செய்தவர் மீது அயோத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Basha - Doha,கத்தார்
14-செப்-202011:54:13 IST Report Abuse
Mohamed Basha முதல்ல இந்த அண்ணாமலை அரசியலுக்கு போனதே தப்பு.. அதிலும் ஸ்டாலினை குறை சொல்வது என்பது அதை விட மகா தப்பு ... என்னமோ பெரிய அரசியல்வாதி ஆயிட்டதா நினைப்பு போல ... முதல்ல அரசியல்ல வளரட்டும் .. அப்புறம் பேசட்டும் ... அரசியல் சாக்கடை என்பது நிரூபணமாகிறது ... யார் யார் எல்லாமோ பேச வந்துட்டான் ... இனிமே ஒன்றும் ஆக போவதில்லை ... இந்தியாவின் நிலைமை அதுதான் ... என்னோட கவலை எல்லாம் என்ன ஆகுமோ என்பதுதான் ... வாழ்க இந்தியா .. வளர்க தமிழ் நாடு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202004:34:17 IST Report Abuse
J.V. Iyer யம்மாடி காலம் கெட்டுவிட்டது. கலியுகம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
10-செப்-202021:46:20 IST Report Abuse
S. Narayanan திருடர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X