சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'ஸ்புட்னிக்- 5' மருந்து இந்தியாவில் உற்பத்தியாகுமா?

Added : செப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'ஸ்புட்னிக்- 5' மருந்து இந்தியாவில் உற்பத்தியாகுமா?

கொரோனா தடுப்பூசியை, வெற்றிகரமாக தயாரித்துள்ள ரஷ்யா, அதை சோதிக்கவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் விரும்புகிறது.இது குறித்து, முறையான வேண்டுகோளை இந்திய அரசிடம் அண்மையில் ரஷ்யா அளித்தது என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரும், கோவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழுவை சேர்தவருமான டாக்டர் வி.கே.பால், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ரஷ்யாவின் கோரிக்கை, இந்தியாவின் மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சித் திறன்களுக்கு பெருமை சேர்ப்பது போல உள்ளதாகவும் வி.கே.பால் கூறினார்.'ஸ்புட்னிக் 5' என பெயரிடப்பட்டுள்ள ரஷ்ய தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட சோதனைகள்ரஷ்யாவில் நடத்தப்பட்டன. இந்த நிலையிலேயே, ஸ்புட்னிக் 5 மருந்து, கொரோனா வைரசை வெற்றிகரமாக தடுப்பதாக ரஷ்ய மருத்துவர்கள் அறிவித்தனர்.

மூன்றாம் கட்ட சோதனை இல்லாமலேயே வெற்றிகரமான தடுப்பூசியாக ஸ்புட்னிக் 5 அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால், கடந்த வாரம், பிரபல மருத்துவ ஆய்விதழான 'தி லான்செட்'டில் ஸ்புட்னிக் 5 குறித்த ஆய்வுகள் வெளியானதால், அதன் நம்பகத் தன்மை, உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அதன் இறுதிக் கட்ட சோதனையை இந்தியாவில் நடத்தவும், பின், அத் தடுப்பூசி மருந்தை பெருமளவில் இந்தியாவிலேயே தயாரிக்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும் ஆலைகள் இந்தியாவில் இருப்பதால், விரைவில், ஸ்புட்னிக் 5 மருந்தை தயாரிக்க ஒரு இந்திய மருந்து நிறுவனம் முடிவாகும் என டாக்டர் பால் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
12-செப்-202001:14:26 IST Report Abuse
NicoleThomson பில் கேட்ஸ் முதல் ஜீ ஜின்பிங் வரை எல்லாத்துக்கும் இந்தியா தான் இளிச்சவாய்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
11-செப்-202015:26:03 IST Report Abuse
Tamilnesan "ஒரு பொம்மலாட்டம் நடக்குது, ரொம்ப புதுமையாக இருக்குது......நாலு பேரு நடுவிலே (அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா) நூலு ஒருத்தன் கையிலே (அமெரிக்கா) ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X