ஸ்புட்னிக்- 5 மருந்து இந்தியாவில் உற்பத்தியாகுமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'ஸ்புட்னிக்- 5' மருந்து இந்தியாவில் உற்பத்தியாகுமா?

Added : செப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
கொரோனா தடுப்பூசியை, வெற்றிகரமாக தயாரித்துள்ள ரஷ்யா, அதை சோதிக்கவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் விரும்புகிறது.இது குறித்து, முறையான வேண்டுகோளை இந்திய அரசிடம் அண்மையில் ரஷ்யா அளித்தது என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரும், கோவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழுவை சேர்தவருமான டாக்டர் வி.கே.பால், ஊடகங்களிடம் தெரிவித்தார்.ரஷ்யாவின் கோரிக்கை, இந்தியாவின் மருந்து
 'ஸ்புட்னிக்- 5' மருந்து இந்தியாவில் உற்பத்தியாகுமா?

கொரோனா தடுப்பூசியை, வெற்றிகரமாக தயாரித்துள்ள ரஷ்யா, அதை சோதிக்கவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் விரும்புகிறது.இது குறித்து, முறையான வேண்டுகோளை இந்திய அரசிடம் அண்மையில் ரஷ்யா அளித்தது என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரும், கோவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழுவை சேர்தவருமான டாக்டர் வி.கே.பால், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ரஷ்யாவின் கோரிக்கை, இந்தியாவின் மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சித் திறன்களுக்கு பெருமை சேர்ப்பது போல உள்ளதாகவும் வி.கே.பால் கூறினார்.'ஸ்புட்னிக் 5' என பெயரிடப்பட்டுள்ள ரஷ்ய தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட சோதனைகள்ரஷ்யாவில் நடத்தப்பட்டன. இந்த நிலையிலேயே, ஸ்புட்னிக் 5 மருந்து, கொரோனா வைரசை வெற்றிகரமாக தடுப்பதாக ரஷ்ய மருத்துவர்கள் அறிவித்தனர்.

மூன்றாம் கட்ட சோதனை இல்லாமலேயே வெற்றிகரமான தடுப்பூசியாக ஸ்புட்னிக் 5 அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால், கடந்த வாரம், பிரபல மருத்துவ ஆய்விதழான 'தி லான்செட்'டில் ஸ்புட்னிக் 5 குறித்த ஆய்வுகள் வெளியானதால், அதன் நம்பகத் தன்மை, உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அதன் இறுதிக் கட்ட சோதனையை இந்தியாவில் நடத்தவும், பின், அத் தடுப்பூசி மருந்தை பெருமளவில் இந்தியாவிலேயே தயாரிக்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும் ஆலைகள் இந்தியாவில் இருப்பதால், விரைவில், ஸ்புட்னிக் 5 மருந்தை தயாரிக்க ஒரு இந்திய மருந்து நிறுவனம் முடிவாகும் என டாக்டர் பால் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X