கடந்த ஆகஸ்டில், இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிய தலைப்புக்களில் முதலிடம் பிடிப்பது, கொரோனாவை தடுக்க, ரஷ்யா உருவாக்கிய ஸ்புட்னிக் தடுப்பூசிதான். அதையடுத்தே இந்திய சுதந்திர தினம் குறித்த தேடல்கள் வந்துள்ளன.
மேலும், அமித் ஷாவுக்கு கொரோனா இருப்பது உண்மையா?, ஜியோ மொபைல் சேவையில் காலர் டியூனாக வரும் கொரோனா அறிவிப்பை நிறுத்துவது எப்படி?, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா குணமாகி விட்டதா? போன்ற கேள்விகள், இந்தியர்களின் தேடலில் முன்னணி வகித்திருப்பதாக, கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.
மற்றபடி, கொரோனாவின் அறிகுறிகள் பற்றியும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் எப்போது விநியோகத்திற்கு வரும் என்பது பற்றியும் அதிகம் பேர் இந்தியாவில் தேடியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE