'ஜி.டி.பி., வீழ்ச்சிக்கும், வேலையிழப்புக்கும் அரசின் கொள்கைகளே காரணம்': ராகுல் குற்றச்சாட்டு

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: 'பொருளாதார வீழ்ச்சிக்கும், கோடிக்கணக்கான மக்களின் வேலையிழப்புக்கும் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம். மக்களின் குரலை மோடி அரசை கேட்க வைக்க வேண்டும்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசைத் தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை ஆகியவை குறித்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல்

புதுடில்லி: 'பொருளாதார வீழ்ச்சிக்கும், கோடிக்கணக்கான மக்களின் வேலையிழப்புக்கும் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம். மக்களின் குரலை மோடி அரசை கேட்க வைக்க வேண்டும்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.latest tamil news
கொரோனா வைரசைத் தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை ஆகியவை குறித்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 'பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவை' என்ற தலைப்பில், இதுவரை, 4 வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டு, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.


latest tamil news
'வேலைக்காக குரல் கொடுப்போம்'

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சினையை தீர்க்கும் வகையில், 'வேலைக்காக குரல் கொடுப்போம்' என்ற தலைப்பில், இன்று காலை 10:00 மணியிலிருந்து 10 மணி நேர பிரச்சாரத்தை காங்., கட்சி துவங்கியுள்ளது.
காங்., கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், 'பேரழிவுகளை உருவாக்கும் கொள்கைகளால், பா.ஜ., அரசு, கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதரத்தை பறித்துவிட்டது. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளது. 'வேலைக்காக குரல் கொடுப்போம்' எனும் பிரச்சாரத்தில் இணையுங்கள். பா.ஜ., அரசின் தவறான சாதனைகளை எதிர்த்து உங்களின் குரலை எழுப்புங்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
latest tamil newsராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மோடி அரசு வகுத்த கொள்கைகளால்தான் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்தார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வரலாற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசின் கொள்கைகள் நசுக்கிவிட்டன. இளைஞர்களின் குரல்களை அரசு கவனிக்க வைப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202019:40:14 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren if They cant even have guts to write in their own name, why we are forced to read them and get upset? please dont post them. Jai Hind.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-செப்-202018:59:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆஸ்ச்சுடா அடுத்த ரவுசு ஆரம்பம் இந்தாளுகிட்டேருந்து ஏதாவது கேசுபோட்டு உள்ளேதள்ளனும் சோனியா இவன் பிரியங்க அண்ட் ஆல் ஜிங் சாக்ஸ் ஒப்பி தேசே கூட்டம் பிஜேபி யா ஆளவிடனும் முடிஞ்சால் பேசாமல் இருக்கவேண்டும் இல்லின்னா வாய்மூடிந்துகுத்துங்கய்யா என்று சொல்லவேண்டும் கீறல்விழுந்த ரெக்கார்டுபோல சொல்லினேனே கிடக்கான்
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
10-செப்-202018:55:07 IST Report Abuse
Mithun ஜிடிபியை பற்றி பேசும் இவர் பணவீக்கம் இவர்கள் ஆட்சியில் 12.5% இருந்ததை தற்போது மத்திய அரசு 3.3% குறைத்ததை பற்றி பேசமாட்டேங்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X