சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை தற்காலிக நிறுத்தம்

Added : செப் 10, 2020
Share
Advertisement
 ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை தற்காலிக நிறுத்தம்

உலகெங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில், முதன்மையானது, இங்கிலாந்திலுள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து சோதித்து வரும் தடுப்பு ஊசிதான்.இரண்டு கட்ட பரிசோதனைகளை தாண்டி மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது இந்த தடுப்பூசி.

உலகிலேயே, சோதனைக்கட்டத்தின்போது, அதிகம் பேருக்கு போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வரும் கோவிட்-19 தடுப்பு மருந்து அது.இந்த நிலையில், கடந்த சில கட்டங்களாக தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு மட்டும், வேறு ஒரு 'அடையாளம் கண்டறியப்படாத' நோய் வந்திருப்பதாக ஆய்வுக் குழுவினருக்குத் தெரிய வந்தது.

எனவே, அதை கண்டறிந்து, அதற்கும், அந்த நோயாளிக்கு போடப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என்று அறியப்படும் வரை, பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள தாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.இதனையடுத்து, இந்தியாவிலும் அஸ்ட்ரா ஜெனகாவின் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அறிவியல்பூர்வமான சோதனைகளில், இதுபோன்ற, பின்னடைவுகள் ஏற்படுவது இயல்புதான் என்றும், மருந்தின் தாக்கத்தை நன்கு ஆராய இது உதவும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X