பருமனான நபருக்கு கொரோனா வந்தால் சிக்கல் அதிகம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பருமனான நபருக்கு கொரோனா வந்தால் சிக்கல் அதிகம்!

Added : செப் 10, 2020 | |
அளவுக்கு மிஞ்சிய உடல் பருமன் உள்ளோருக்கு கொரோனா தொற்று வந்தால், அவர்கள் இளம் வயதில் இருந்தாலும், அது பெரும் போராட்டத்தில் கொண்டுபோய் விடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்கண்டறிந்துள்ளனர்.'ஒபிசிட்டி ரிவ்யூ' என்ற ஆய்விதழின்படி, பருமனாக உள்ள கொரோனா நோயாளிகள், அளவான எடையுள்ள கொரோனா நோயாளிகளைவிட, மருத்துவமனைக்கு சென்று சேர்க்கப்படுவ தற்கு, 113 சதவீதம் அதிக
 பருமனான நபருக்கு கொரோனா வந்தால் சிக்கல் அதிகம்!

அளவுக்கு மிஞ்சிய உடல் பருமன் உள்ளோருக்கு கொரோனா தொற்று வந்தால், அவர்கள் இளம் வயதில் இருந்தாலும், அது பெரும் போராட்டத்தில் கொண்டுபோய் விடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்கண்டறிந்துள்ளனர்.'ஒபிசிட்டி ரிவ்யூ' என்ற ஆய்விதழின்படி, பருமனாக உள்ள கொரோனா நோயாளிகள், அளவான எடையுள்ள கொரோனா நோயாளிகளைவிட, மருத்துவமனைக்கு சென்று சேர்க்கப்படுவ தற்கு, 113 சதவீதம் அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட, 74 சதவீதம் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதைவிட வருத்தமான கணிப்பு, அவர்கள் மரணம் தழுவ 48 சதவீதம் கூடுதல் வாய்ப்புக்கள் உள்ளன.வியர்க்குமளவுக்கு உடற்பயிற்சி, சத்தில்லாத உணவை தவிர்ப்பது, சத்தான உணவை கட்டுப்பாடாக உண்பது போன்றவற்றால் நோய் எதிர்ப்பு ஆற்றலை பருமனாக உள்ளோர் பெற முடியும்.அதுதான் அவர்களை கொரோனா தொற்றாமல் காக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X