அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரியலுார் மாணவருக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (157)
Share
Advertisement
பெரம்பலுார் : அரியலுார் மாவட்டம் இலந்தங்குழியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 19, 2017ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்ற இவர் தனியார் நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றார்.இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் செப்.13ல் நீட் தேர்வை எழுத தயாராகி வந்தார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து
அஞ்சலி, உதயநிதி, எதிர்ப்பு

பெரம்பலுார் : அரியலுார் மாவட்டம் இலந்தங்குழியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 19, 2017ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்ற இவர் தனியார் நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் செப்.13ல் நீட் தேர்வை எழுத தயாராகி வந்தார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நேற்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் பா.ம.க.வினர் மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின் விக்னேஷின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். பா.ம.க. சார்பில் 10 லட்சம், வி.சி.க. சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


latest tamil news

ரூ.7 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமிஇறந்த மாணவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும் , என அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga Subramanian - Kolkatta,இந்தியா
17-செப்-202007:22:01 IST Report Abuse
Naga Subramanian பதவிக்காக பிணத்தை வைத்து அரசியல். பணத்தையும் கொடுத்து, அதை விளம்பரம் செய்வதிலிருந்து தெரிகிறது, இது பதவிக்கான அரசியல் என்று. என்று தணியும் இந்த பதவியின் மேலுள்ள மோகம்? மாணவர்களை ஊக்கப்படுத்துவதை விட்டு, சாவதை ஊக்கப்படுத்துவது போலுள்ளது. இதற்க்கு ஏதும் முற்றுப்புள்ளி இல்லையா?
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
16-செப்-202019:11:13 IST Report Abuse
dina தற்கொலைக்கு சன்மானம்? அப்பிடியென்றால் எல்லோரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள், இது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல, மனு தர்மத்தை பேசுபவர்கள் சாணக்கிய அரசியல் தர்மத்தையும் மனதில் கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
sambath kumar - pondicherry,இந்தியா
16-செப்-202010:29:59 IST Report Abuse
sambath kumar People's hard earned tax money spend by the stupid government for their vote. Instead build infrastructures-hospitals- implement CBSE -in Govt.schools-Mr. C.M. Don't spoil the state. If this trend continues we never come back to the track.As a common man i request you sir.Don't encourage this kind of activities. You will lose common people's vote.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X