புதுடில்லி: மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்யும் சிவசேனா தனக்கு இழைக்கும் அநீதியை கண்டு கொள்ளாமல் சோனியா மவுனம் காப்பது குறித்து வரலாறு மதிப்பிடும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக, நடிகை கங்கனா ரணாவத் கூறியது, சிவசேனா கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர். கங்கனாவுக்கு மிரட்டல் விடப்பட்டது. இதனையடுத்து அவருக்கு 'ஒய் பிரிவு' பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மும்பை வந்தார். இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள, கங்கனாவின் பங்களாவில், விதிகளை மீறி கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி, அவற்றை இடிக்க, மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது. இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கங்கனா கண்டனம் தெரிவித்திருந்தார்

இது தொடர்பாக டுவிட்டரில் கங்கனா பதிவிட்டுள்ளதாவது: ''மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய காங்கிரஸ் தலைவராகிய சோனியா அவர்களே, ஒரு பெண்ணான உங்கள் பங்கு உள்ள மஹாராஷ்டிரா ஆட்சி எனக்கு இழைக்கும் கொடூரங்கள் உங்களை கவலைபட செய்யவில்லையா. டாக்டர் அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன உயரிய கொள்கைகளை கடைபிடிக்க உங்கள் அரசுக்கு நீங்கள் அறிவுறுத்த மாட்டீர்களா?
நீங்கள் வெளிநாட்டில் பிறந்து, இந்தயாவில் வாழ்கிறீர்கள். பெண்களின் துயரங்கள் உங்களுக்கு தெரியும். உங்கள் அரசு என்னை போன்ற பெண்ணை துன்புறுத்துவது பற்றிய உங்கள் மவுனத்தையும், அலட்சியத்தையும் பற்றி வரலாறு தீர்ப்பளிக்கும். சட்டம் ஒழுங்கை மஹாராஷ்டிரா அரசு கேலிக்கூத்தாக்கி வருகிறது. நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன் .'' என பதிவிட்டுள்ளார்.
You have grown up in the west and lived here in India. You may be aware of the struggles of women. History will judge your silence and indifference when your own Government is harassing women and ensuring a total mockery of law and order. I hope you will intervene 🙏@INCIndia
— Kangana Ranaut (@KanganaTeam) September 11, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE