பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தியால் துரிதமாக உதவிய அமைச்சர்: குவியும் பாராட்டு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
வேடசந்தூர்: இன்று (செப்.,11) நமது தினமலர் நாளிதழில் ‛பாலை தந்து வாழ்வை தந்த பசு, சாலையில் பலியானதால் தவிப்பு' என்ற செய்தி வெளியானது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பணி நிமித்தமாக காரில் திண்டுக்கல் வழியாக சென்று கொண்டிருந்த போது, இந்த செய்தியை படித்துள்ளார்.அதில் பாதிக்கப்பட்ட வெள்ளத்தாய் என்பவரது மொபைல் எண்ணும் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்பு
தினமலர், செய்தி_எதிரொலி, அமைச்சர்_உதவி, பசு

வேடசந்தூர்: இன்று (செப்.,11) நமது தினமலர் நாளிதழில் ‛பாலை தந்து வாழ்வை தந்த பசு, சாலையில் பலியானதால் தவிப்பு' என்ற செய்தி வெளியானது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பணி நிமித்தமாக காரில் திண்டுக்கல் வழியாக சென்று கொண்டிருந்த போது, இந்த செய்தியை படித்துள்ளார்.

அதில் பாதிக்கப்பட்ட வெள்ளத்தாய் என்பவரது மொபைல் எண்ணும் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்பு கொண்டு பேசிய ராதாகிருஷ்ணன், ஆறுதல் கூறியதுடன் கண்டிப்பாக உதவி செய்வதாகவும் உறுதி கூறினார். மேலும், திண்டுக்கல் கால்நடைத்துறை இணை இயக்குனரிடம், பாதிக்கப்பட்ட ஏழை வெள்ளைத்தாய்க்கு உரிய ஆறுதல் கூறி மீண்டும் நன்கு பால் தரக்கூடிய பசுமாடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேரில் சென்று ஆறுதல் கூற அறிவுறுத்தினார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடமும் இதுகுறித்து உதவிட கேட்டுக்கொண்டார்.


latest tamil news



latest tamil news



அதனடிப்படையில் கால்நடைத்துறை டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள கிரியம்பட்டியை சார்ந்த பாதிக்கப்பட்ட வெள்ளத்தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். வாழ்வாதாரம் இழந்த ஒரு ஏழைப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் மனிதநேயத்துடன் நிவாரணம் கிடைத்திட உதவிய ராதாகிருஷ்ணனுக்கும், மனிதநேயத்துடன் செய்தி வெளியிட்டு பேருதவியாக இருந்த தினமலர் நாளிதழ் நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
12-செப்-202020:51:55 IST Report Abuse
Rangiem N Annamalai வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
12-செப்-202015:58:07 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். ஒரு ஏழையின் மனத்தைக் குளிர்ச்சி செய்த அமைச்சரின் செயல் அவரது குடும்பத்தார் அனைவருக்குமே புண்ணியத்தை தரும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த உதவி கிடைக்க காரணமான தினமலரையும் பாராட்டுவதுதான் நியாயம்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
12-செப்-202011:44:30 IST Report Abuse
Rameeparithi உதவிய உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X