பொது செய்தி

இந்தியா

இந்தியர்களின் கொரோனா இறப்பு சதவீதம் குறைவு; மேலை நாடுகள் வியப்பு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவை அடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் வீரியம் மிகக் குறைவாகவே உள்ளது.மற்ற நாடுகளில் கொரோனாவுக்கு பலர் பலியாகிவரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை
India, MortalityRate, CoronaVirus, WorldLowest, Covid-19, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, குறைவு

புதுடில்லி: அமெரிக்காவை அடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் வீரியம் மிகக் குறைவாகவே உள்ளது.

மற்ற நாடுகளில் கொரோனாவுக்கு பலர் பலியாகிவரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை குறைவாகவும் வைரஸ் பரவும் வேகம் அதிகமாகவும் உள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி விரைவில் பலி எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும், அதற்காக சுகாதாரத்துறை ஆவண செய்யும் என உறுதி அளித்து இருந்தார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள டில்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட தற்போது பலி எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுகாதாரத்துறை அறிக்கைப்படி கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட 100 பேரில் 4 சதவீதம் பேர் உயிரிழந்தனர்.


latest tamil news


ஆகஸ்ட் மாதம் இந்த சதவீதம் 2.15 ஆக குறைந்தது. தற்போது செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை சேர்ப்பதால் மக்களின் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் தட்ப வெட்பம் இதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது எனவும் கூறப்படுகிறது.

அதிகபட்சமாக பிரிட்டனில் 100 கொரோனா நோயாளிகளில் 12 பேர் மரணமடைகின்றனர். இதற்கு காரணம், பிரிட்டன் துருவப் பகுதி அருகே இருப்பதுதான் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
11-செப்-202021:05:19 IST Report Abuse
spr திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல அதிரடியாக பல செயல்களை முன்னெடுத்துச் செய்யும் மத்திய மாநில அரசுகள் தடுப்பு மருந்துகளையும் குணமாக்கும் மருந்துகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காத நிலையில், தெய்வமே நம் மக்களைக் காப்பாற்றுகிறது
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
11-செப்-202018:03:37 IST Report Abuse
Gnanam ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளை நம்பிக்கையோடு கையாண்டிருந்தால் இறப்பு விகிதத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
Rate this:
Cancel
11-செப்-202017:36:47 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வெந்நீர் குடியுங்கள் , ரசம் குடியுங்கள் மதுவை மட்டும் குடிக்காதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X