புதுடில்லி: அமெரிக்காவை அடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் வீரியம் மிகக் குறைவாகவே உள்ளது.
மற்ற நாடுகளில் கொரோனாவுக்கு பலர் பலியாகிவரும் நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை குறைவாகவும் வைரஸ் பரவும் வேகம் அதிகமாகவும் உள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி விரைவில் பலி எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும், அதற்காக சுகாதாரத்துறை ஆவண செய்யும் என உறுதி அளித்து இருந்தார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள டில்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட தற்போது பலி எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சுகாதாரத்துறை அறிக்கைப்படி கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட 100 பேரில் 4 சதவீதம் பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் மாதம் இந்த சதவீதம் 2.15 ஆக குறைந்தது. தற்போது செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை சேர்ப்பதால் மக்களின் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் தட்ப வெட்பம் இதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது எனவும் கூறப்படுகிறது.
அதிகபட்சமாக பிரிட்டனில் 100 கொரோனா நோயாளிகளில் 12 பேர் மரணமடைகின்றனர். இதற்கு காரணம், பிரிட்டன் துருவப் பகுதி அருகே இருப்பதுதான் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE