தாவூத் வீட்டை இடிக்காமல் கங்கனா வீட்டை இடிக்கும் மஹா., அரசு: பட்னவிஸ் தாக்கு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
மும்பை: மும்பை நிழல் உலக தாதா தாவூத் வீட்டை இடிக்காமல், நடிகை கங்கனா வீட்டை மாநில அரசு இடிக்கிறது என பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதை விட, நடிகை கங்கனா ரணாவத்தை எதிர்த்து போராடுவதே முக்கியம் என மாநில அரசு நினைக்கிறது. இன்று இந்தியாவிலேயே, கொரோனா பாதித்தவர்கள்
DevendraFadnavis,Dawood,  Actor KanganaRanaut, OfficeDemolition, கங்கனா ரணாவத், மும்பை, பாஜ, தேவேந்திரபட்னாவிஸ், பட்னாவிஸ்

மும்பை: மும்பை நிழல் உலக தாதா தாவூத் வீட்டை இடிக்காமல், நடிகை கங்கனா வீட்டை மாநில அரசு இடிக்கிறது என பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதை விட, நடிகை கங்கனா ரணாவத்தை எதிர்த்து போராடுவதே முக்கியம் என மாநில அரசு நினைக்கிறது. இன்று இந்தியாவிலேயே, கொரோனா பாதித்தவர்கள் மஹாராஷ்டிராவில் தான் உள்ளனர். தினமும் 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களில் 40 சதவீதம் பேர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். ஆனால், கொரோனாவை எதிர்த்து மாநில அரசு போராடவிரும்பவில்லை. மாறாக, கங்கனா ரணாவத்துடன்மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. நடிகையை எதிர்ப்பதில் செலவிட்ட, ஆற்றலை, கொரோனாவுக்கு எதிராக பாதி செலவிட்டிருந்தால், பலரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.


latest tamil news



கங்கனா ரணாவத் விவகாரத்தை பா.ஜ., எப்போதும் எழுப்பியதில்லை. கங்கனா மும்பைக்கு வரக்கூடாது ஏன் என ஏன் மாநில அரசு ஏன் சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கை ஏன் வெளியிட்டது. கங்கனா, அரசியல் தலைவர் இல்லை. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வீட்டை இடிக்க செல்ல மாட்டீர்கள். ஆனால் நடிகையின் வீட்டை இடிப்பீர்கள். இந்த விஷயத்தை பெரிதுபடுத்தியது யார். இதில் பா.ஜ.,வுக்கு என்ன தொடர்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.KESAVAN - chennai,இந்தியா
13-செப்-202012:35:28 IST Report Abuse
B.KESAVAN அதிகாரத்தை எப்படியாவது பெறவேண்டும் என்று நினைத்து சனியனை எடுத்து பனியனாக போட்டுக்கொண்டது சிவசேனா, இப்போது சோனியா சேனாவினால் குத்துதே குடையுதே என்றால் எப்படி. மஹாராஷ்டிர அரசு எப்போதுமே மறைமுக அரசியல் தான், பாலிவுட் வியாபாரம் தான் எல்லாப்பிரச்சனைகளுக்கும் காரணம்,மக்கள் சரியாக கவனித்து செய்யவேண்டியதை அமைதியாக செய்து இவர்களுக்கு புரியவைய்க்கவேண்டும்.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
12-செப்-202018:16:32 IST Report Abuse
Narasimhan சோனியா சேனா காரன் இப்போது மும்பையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மேட்ச் என்றால் கூட வாயை திறக்க மாட்டான்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-செப்-202014:00:44 IST Report Abuse
Sampath Kumar தீபிகாவிற்கா பாதுகாப்பு இல்லாமல் இவளுக்கு நீங்க கொடுத்தீங்களா அதனாலதான் அப்பு உங்க கும்பலுக்கு வந்த ரத்தம் மற்றவனுக்கு வந்த தக்காளி சட்டினி போவியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X