மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் தோழியும், நடிகையுமான ரியா, விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் அடிப்படையில், போதை மருந்து பயன்படுத்துவது தொடர்பாக 15 பாலிவுட் நடிகர்கள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், கண்காணிப்பில் உள்ளவர்கள் அனைவரும் 'பி -கிரேட்' நடிகர்கள் ஆவார்கள். அதில் சிலர் வாங்குகின்றனர். சிலர் வாங்குவர்களாகவும், சிலர் நுகர்வோர்வர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு போதை மருந்து விநியோகம் செய்வதற்கு என சில குழுக்கள் உள்ளன. போதை மருந்து தடுப்பு பிரிவு விசாரணையின் போது, இந்த வழக்கில் கைதாகியுள்ள சவிக் சக்ரபோர்த்தி மற்றும் திபேஷ் சாவந்த், ஆகியோர், ஊரடங்கிற்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மாதம், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மத்தியிலும், சுஷாந்த் வீட்டில் இருந்து கூரியர் சேவை மூலம் ரியா வீட்டிற்கு போதை மருந்தை விநியோகித்துள்ளனர். இதனை கூரியர் பணியில் ஈடுபட்டவர்கள், இதனை உறுதி செய்துள்ளனர்.

கூரியர் சேவையில் ஈடுபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: சுஷாந்த் வீட்டில் திபேஷிடம் இருந்து அரை கிலோ போதை மருந்தை வாங்கி கொண்டு ரியா வசித்த வீட்டில் இருந்த சவிக் சக்ரபோர்த்தியிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். திபேஷ் மற்றும் சவிக்கின் மொபைல் எண்கள் கூரியர் சேவையில் ஈடுபட்டவவர்களின் மொபைல் எண்ணில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போதை மருந்து வழக்கில் கைதான ரியா தாக்கல் செய்த ஜாமின் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE