லே: லடாக் எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ பிரிகேட் கமாண்டர்கள் மட்டத்திலான் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்திய -சீன எல்லை பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. இரு தரப்பிலும் படைகளை குவித்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் , ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது , சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை , நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இருவரும் இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து 2 மணி நேரத்திற்கு மேல் விவாதித்தனர். அப்போது எல்லை பிரச்னை குறித்தும் ஆலோசித்தனர்..இதில் . கிழக்கு லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், லடாக்கின் சுசூல் பகுதியில் இந்தியா - சீன ராணுவத்தின் பிரிகேட் கமாண்டர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று(செப்., 11) காலை 11 மணிக்கு துவங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்வான் ஏரி பகுதியில் இந்திய வீரர்களை, சீன வீரர்கள் அத்துமீறி தாக்கினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் பதிலடியில் 40 சீன வீரர்கள் உயிரிழந்திருந்தாலும், அதனை அந்நாடு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது . தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாங்காங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறினர். இதனை நமது வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், பாங்காங் ஏரியை அருகேயுள்ள பகுதியை சீனா கட்டுப்படுத்த முயன்றது தடுக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனபாதுகாப்புஅமைச்சர் வெய் பெங்கேயை சந்தித்து பேசினார். அப்போது, பாங்காங் சோ பகுதியில் இருந்து சீன ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என ராஜ்நாத் வலியுறுத்தி இருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE