அஸ்ட்ராஜெனக்கா மருந்து சோதனை நிறுத்தம்: நம்பிக்கை இழக்க வேண்டாம்: ‛WHO ஆறுதல்| Dinamalar

அஸ்ட்ராஜெனக்கா மருந்து சோதனை நிறுத்தம்: நம்பிக்கை இழக்க வேண்டாம்: ‛WHO' ஆறுதல்

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (4)
Share
லண்டன்: அஸ்ட்ராஜெனக்கா கொரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு ஆறுதல் தெரிவித்துள்ளது. இது விழிப்புக்கான அழைப்பு என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை சோதனை முறையில் செலுத்தப்பட்ட ஒரு

லண்டன்: அஸ்ட்ராஜெனக்கா கொரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு ஆறுதல் தெரிவித்துள்ளது. இது விழிப்புக்கான அழைப்பு என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை சோதனை முறையில் செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு உடல் நலம் பாதித்ததையடுத்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளரான சவுமியா சுவாமிநாதன் வெளியிட்டுள்ள காணொளியில் தடுப்பு மருந்துச் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஒரு விழிப்புக்கான அழைப்பு தான் என்றும் இதனால் விஞ்ஞானிகள் உற்சாகம் இழக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆய்வின் போது ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், நாம் அதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


latest tamil news



கடந்த மாதம் அமெரிக்காவில் மட்டும் அஸ்ட்ராஜெனக்கா மருந்தினை பரிசோதனை செய்ய 30,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இத்தடுப்பு மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. அதில் பலருக்கு பிரச்னைகள் ஏதும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X