பொது செய்தி

இந்தியா

பார்லி.,யில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020
Share
Advertisement
parliament, monsoon session, parliament session

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், மசோதாக்கல் அவசர சட்டத்தை மாற்ற கொண்டு வரப்படும் 11 மசோதாக்கள் உட்பட, 23 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடர் செப்., 14ம் தேதி முதல், அக்.,1ம் தேதி வரை, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா நிதி திரட்ட எம்.பி.,க்கள் சம்பளம் ஒரு ஆண்டுக்கு 30 சதவீதம் குறைப்பு தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் உற்பத்தி வர்த்தக ஊக்குவிப்புக்காக அவசரச்சட்டம், விவசாயிகள் நாடுமுழுவதும் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற அவசர சட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


latest tamil news



காஷ்மீருக்கு 5 அலுவல் மொழி, தொழிலாளர் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் மசோதா, மனிதக்கழிவுகளை மனிதர்களை அள்ளுவதை தடை செய்யும் மசோதா, மறுவாழ்வு திருத்த மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் 11 மசோதாக்கள், அவசரச்சட்டத்தை மாற்ற கொண்டுவரப்படும் மசோதாக்களாகும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X