பொது செய்தி

இந்தியா

சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் காலமானார்

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: சமூக ஆர்வலரும் ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் 80, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.latest tamil newsஆந்திராவின் ஶ்ரீகாகுளத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். இன்றைய சத்தீஸ்கரில் இருந்த சக்தி மாகாண திவானாக பணியாற்றிய தாத்தாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார் அக்னிவேஷ்.

கோல்கட்டா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பின்னாளில் பணியாற்றிய சப்யாசாச்சி முகர்ஜியிடம் ஜூனியர் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றார்.


latest tamil news1970களில் ஆரிய சமாஜ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி ஆரிய சபா என்ற தனிக்கட்சியை தொடங்கியவர் சுவாமி அக்னிவேஷ். 1875-ல் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்டது ஆரிய சமாஜ். 2004-2014ல் இதன் அகில உலக தலைவராகவும் இருந்தார் .

ஹரியானாவில் 1977-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1979ல் அம் மாநில கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சமீபகாலமாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுவாமி அக்னிவேஷ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
12-செப்-202010:16:35 IST Report Abuse
Indhuindian Selfless social worker unmatched in the current context. R I P
Rate this:
Cancel
11-செப்-202022:57:20 IST Report Abuse
ஆரூர் ரங் நல்ல ஆளாத்தான் இருந்தாரு. எப்படியோ நக்சல் சகவாசம் கெடுத்துடிச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X