சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

முதல் வீராங்கனை

உலகில் இதுவரை 564 விண்வெளி வீரர்கள், விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் 64 பேர் பெண்கள். இதில் விண்வெளிக்கு சென்ற முதல் மற்றும் இளம் பெண் வீராங்கனை என்ற பெருமையை ரஷ்யாவின் வேலன்டினா டிரஸ்கோவா பெற்றுள்ளார். இவர் 1937 மார்ச் 6ல் பிறந்தார். சோவியத் யூனியன் விமானப்படையில் பணியாற்றிய இவர், 1963ல் 'வோஸ்டாக் - 6' என்ற விண்கலம் மூலம் முதன்முறையாக விண்வெளிக்கு சென்றார். அங்கு 48 முறை பூமியை சுற்றி வந்தார். மூன்று நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.


தகவல் சுரங்கம்




முதல் உதவி தினம்



உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை காப்பாற்று வதற்கு உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை கொண்டு அவசரநிலை பராமரிப்பை மேற்கொள்வதே முதல் உதவி. விபத்தில் காயமடைபவர்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி வழங்கினால், அவர் களின் மரணத்தை தடுக்கலாம். முதல் உதவி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக ரெட்கிராஸ் அமைப்பு ஆண்டுதோறும் செப்., இரண்டாவது சனிக்கிழமையை (செப்.12) உலக முதல் உதவி தினமாக கடை பிடிக்கிறது. பாதிப்புக்கு ஏற்றவாறு 'முதல் உதவி' பற்றி மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X