காங்., பொதுச் செயலர் பதவி: :குலாம் நபி ஆசாத் நீக்கம்

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
 காங்., பொது செயலாளர், பதவி,  குலாம்நபி ஆசாத், விடுவிப்பு


புதுடில்லி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து, குலாம் நபி ஆசாத் நீக்கப்பட்டு உள்ளார்,'காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்; கட்சியின் காரிய கமிட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக்கோரி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, கட்சியின் பொதுச் செயலராக இருந்த குலாம் நபி ஆசாத் உட்பட, 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடும் கண்டனம் தெரிவித்தார்.


அறிக்கை



latest tamil news




இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியை, இடைக்கால தலைவர் சோனியா மாற்றிஅமைத்துள்ளார். இது பற்றி, காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:காங்கிரஸ் பொதுச் செயலர்களாக இருந்த குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, லுசின்ஹோ பலிரியோ, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். எனினும், காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக, குலாம் நபி ஆசாத் நீட்டிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக, சிதம்பரம், ஜிதேந்திர சிங், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக, தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கூடுதலாக, புதுச்சேரி, கோவா மாநில பொறுப்பாளராகவும் இருப்பார்.தமிழகத்திற்கான பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக், மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக, தமிழக எம்.பி., மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பொறுப்பாளராக, தமிழக எம்.பி., செல்லகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.


சிறப்புக் குழு



காரிய கமிட்டியின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக, ஜிதின் பிரசாதா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலராக உள்ள ஜிதின் பிரசாதா, உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக இருந்தார். இப்போது, விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் மேற்கு வங்க மாநில பொறுப்பாளராக மாற்றப்பட்டுஉள்ளார்.கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக, மதுசூதன் மிஸ்த்ரி, ராஜேஷ் மிஷ்ரா, கிருஷ்ணா பைரே கவுடா, ஜோதிமணி, அர்விந்த் சிங் லவ்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவருக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், ஏ.கே. அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
18-செப்-202015:45:49 IST Report Abuse
srinivasan ஆஜாத் க்கு காங்கிரஸ் ல் இருந்து விடுதலை ஆசாத் இ
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
13-செப்-202017:20:22 IST Report Abuse
madhavan rajan பிரியங்காவின் மகனுக்கு பதவி வேண்டாமா? இவரே நீடித்தால் எப்படி?
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
12-செப்-202019:46:42 IST Report Abuse
Chowkidar Modikumar காங்., பொதுச் செயலர் பதவி: :குலாம் நபி ஆசாத் நீக்கம், இந்த செய்தி, செயல் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் ஹம்பக். பிஜேபி கட்சியை குலைக்க மாஸ்டர் பிளான் நடக்கிறது. காங்கிரஸ் ல் இருந்து நீக்கப்படுவது போல் வெளியே வந்து பிஜேபி யில் சேர்வார்களாம், பிஜேபி யில் இருந்து கொண்டு ஸ்லீப்பர் செல் போல் செயல்படத்தான் இதுபோல் நரி தந்திர வேலைகளை பிரித்தாளும் சூழ்ச்சியுள்ள காங்கிரஸ் செய்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X