பொது செய்தி

இந்தியா

இந்திய கிராமங்களில் 69.4 % கொரோனா பாதிப்பு ; தேசிய செரோ கணக்கெடுப்பு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : இந்திய கிராமங்களில் 69.4 சதவீதத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தேசிய செரோ கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நோய் தொற்றை மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறந்த முறையில் கையாண்டு வருவதால் தொற்று பாதிப்பு விகிதமும், இறப்பு விகிதமும் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரதுறை தொடர்ந்து வலியுறுத்துகிறது. நாட்டின் கொரோனா பாதிப்புகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ( ICMR ) நடத்திய முதல் தேசிய செரோசர்வேயின் எதிரபார்க்கப்பட்ட கண்டுபிடிப்புகளில், இந்தியாவின் கிராமங்களில் மொத்தம் 69.4% மக்கள் கொரோனோ வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்புகளின் முடிவுகள் கிராமப்புறங்களில், செரோ நேர்மறை விகிதம் ( தொற்று பாதிப்பு ) 69.4 சதவீதமாகவும், நகர்ப் புறங்களில், 15.9 சதவீதமாகவும், நகர்ப்புற சேரிகளில் 14.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. நாட்டில் 18 முதல் 45 வயது உடையவர்களிடையே (43.3) செரோ தொற்று பாதிப்பு ( Positivity ) அதிகமாக இருந்தது. 46 முதல் 60 வயது (39.5) மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே மிகக் குறைந்த செரோ தொற்று பாதிப்பு உள்ளது. இந்தியாவின் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் 700 கிராமங்கள் மற்றும் வார்டுகளில் மே 11 முதல் ஜூன் 4 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.


latest tamil newsகொரோனா கவாச் ELISA கிட்டைப் பயன்படுத்தி IgG ஆன்டிபாடிகளுக்கு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட 28,000 நபர்களை இது உள்ளடக்கியது. மே மாத தொடக்கத்தில் இந்தியாவில் மொத்தம் 64,68,388 வயது வந்தோருக்கான (adult) தொற்றுநோய்கள் இருப்பதாக தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக சரிசெய்யப்பட்ட செரோபிரெவலன்ஸ் 0.73 சதவீதம் மற்றும் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு RT-PCR உறுதிப் படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பிலும் இந்தியாவில் 82-130 நோய்த்தொற்றுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்தியாவில் ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது, வயது வந்தோரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் 2020 மே நடுப்பகுதியில் கொரோனாவிற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகும் குறைவான பாதிப்பு இந்தியா தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதைக் குறிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-202012:30:05 IST Report Abuse
Tamilan வெறும் 700 கிராமங்கள் 28,000 மாதிரிகளை வைத்து பல பத்தாயிரம் கிராமங்கள் நூறு கோடி மக்களை மதிப்பிடமுடியாது. மே மாத தொடக்கத்தில் 64,68,388 தொற்று இருந்தால் நாடுமுழுவுதும் ஊரடங்கு இருக்கும் போது, ஒரு வீட்டில் நான்கைந்து பேருக்கு ஊரடங்கு காலத்தில் பரவியது என்று வைத்துக்கொண்டால் கூட ஓரண்டங்குக்கு முன்னரே 15 ,00 ,000 பேருக்கு பராயிருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம் . அதுவரை யாருக்கும் தெரியவில்லை அல்லது எதிர்பார்க்கவில்லை . பின் அவர்களை மாதக்கணக்கில் யார் யார் என்று கண்டறிய முடியவில்லை . அனைவரையும் கண்டறியும் முன்னர் பணமுதலைகளைக்காக்க அனைத்தையும் திறந்து விட்டது ஏன் ?. அதனால் இப்போது பல கோடிப்பேருக்கு பரவியிருக்கும். அதில் கண்டுபிடித்து அரசியல் சட்ட மருத்துவத்துறையின் முன் நிறுத்தியது ஒரு கோடிக்கும் குறைவு என்றுதான் அர்த்தம் . இதையும் வெட்கமில்லாமல் விஞ்சான அரசியல் சட்ட அமைப்புகள் வெளியிடுவது உலகில் உள்ள அனைவருக்கும் அதன் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்றல்ல . ஏற்கனவே உலகில் உள்ள எவரும் , குறிப்பாக இந்தியாவில் உள்ளவர்கள் யாரும் அரசியல் சட்டத்தை மதிக்காததற்கு இதுவும் ஒரு காரணம் . அரசியல் சட்ட வேலைவாய்ப்புகளில் தொழில் துறைகளில் பணம் குவிந்துள்ளதால் , உலகமயமாக்கலின் ஒட்டுமொத்த பணத்தையும் அதில் கொண்டுபோய் குவித்துள்ளதால் உலகில் உள்ள அனைவரும் அந்த பணத்திற்காக ..போல் காத்திருக்கிறார்கள், அலைகிறார்கள். இவாளை சிறப்புக்கள் மிகுந்தது எப்போதும் இல்லாத விஞ்சான அரசியல் சட்ட அமைப்புகளின் acheivement. உலகில் உள்ள எந்த ஒரு ...கூட சிந்தாது. நாயைப்போல் ஆக்கப்பட்டுவிட்ட கொஞ்ச மனிதர்கள் மட்டுமே சிந்துகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X