சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொல்லியல்துறை இயக்குநர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொல்லியல்துறை இயக்குநர் ஆய்வு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020
Share

திருநெல்வேலி:ஆதிச்சநல்லுார், சிவகளையில் நடந்துவரும் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல்துறை இயக்குநர் உதயசந்திரன் பார்வையிட்டார்.



latest tamil news



துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லுார், சிவகளை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறையினர் மே 25ம் தேதி முதல் அகழாய்வு பணிகளை மேற்கொணடுவருகின்றனர். இதில் 20 தொல்லியல் அதிகாரிகள், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆதிச்சநல்லூரில் 72 குழிகளும், சிவகளையில் 26 குழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகளில் இருந்து நெல்மணிகள், தாடை பற்கள், இரும்பு கருவிகள், எழுத்து கீறல்கள் மற்றும் குறியீடுகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொன்மை பொருட்கள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளில் இருந்தும் சுடுமண் புகைப்பான், வளையல், தமிழி எழுத்து, குழந்தையின் எலும்பு கூடு, மக்கள் வாழ்விடத்தில் அவர்கள் பயன்படுத்திய வடிகால் குழாய் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.


latest tamil news



இரு இடங்களிலும் நடக்கும் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரன் பார்வையிட்டார். அங்கு சேகரிக்கப்பட்ட தொன்மை பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. கீழடியை போலவே இங்குள்ள அகழாய்வு அறிக்கையை 24 மொழிகளில் தமிழக அரசு வெளியிடவேண்டும், இங்கு கிடைக்கும் பொருள்களை இந்தப்பகுதியிலேயே காட்சிபடுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர். உதயசந்திரன் கூறுகையில், தற்போது பார்வையிட மட்டுமே வந்துள்ளதாகவும் விரைவில் இதன் அறிக்கையோடு மீண்டும் வரஉள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின்போது தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், புதுச்சேரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜன், தொல்லியல் அதிகாரிகள் சிவானந்தம், பாஸ்கர், லோகநாதன், பிரபாகரன், தங்கதுரை உள்ளிட்டோர் இருந்தனர். தொல்லியல் ஆர்வலர்கள் முத்தலாங்குறிச்சி காமராஜ், சிவகளை மாணிக்கம், காந்திமதிநாதன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X