அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை மத்திய,மாநில அரசுகள் கைவிட்டதாக குற்றச்சாட்டு

Updated : செப் 13, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை :''தடுப்பூசியும் இல்லை; நோய் வந்தால், சிகிச்சைக்கு மருந்தும் இல்லை என்ற நிலையில், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.மறைந்த தமிழக காங்கிரஸ், செயலர் தலைவர் வசந்தகுமாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழக காங்கிரஸ் சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி
 
மக்களை கைவிட்ட அரசுகள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை :''தடுப்பூசியும் இல்லை; நோய் வந்தால், சிகிச்சைக்கு மருந்தும் இல்லை என்ற நிலையில், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

மறைந்த தமிழக காங்கிரஸ், செயலர் தலைவர் வசந்தகுமாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழக காங்கிரஸ் சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமை வகித்தார். ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா தொகுத்து வழங்கினார். ம.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வசந்தகுமார் பற்றிய நினைவுகளை பகிர்ந்தனர்.


சிரித்த முகம்


ஸ்டாலின் பேசியதாவது:கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றியதால், தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஜெ.அன்பழகனை இழந்தது போல, வசந்தகுமாரை இழந்துஉள்ளோம்.
வசந்தகுமாருக்கு நோய் தொற்று ஏற்பட்டதும், அவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன். அவரும் உற்சாகமாகத் தான் பேசினார். அவரிடம் ஒரு பயமோ, பதற்றமோ இல்லை; விரைவில், மீண்டு வந்து விடுவார் என, நம்பினேன்.

ஆனால், திடீரென உடல் நிலையில் பின்னடைவு, அபாய கட்டத்தில் இருக்கிறார் என்றபோது, உண்மையில் நம்ப முடியவில்லை.இறுதியில் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பது, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்போதும் சிரித்த முகம். அது தான், அவரோட வெற்றிக்கு காரணம்.'வசந்த் அண்ட் கோ' வெற்றிக்கு உண்மையான காரணம், அவரது அந்த சிரிப்பு தான்.
அத்தகைய சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், முதன் முதலாக, நம்மை எல்லாம் அழ வைத்து சென்று விட்டார். வசந்தகுமார் வாழ்க்கையை படிப்பதன் வாயிலாக, இளைஞர்கள் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும்.

வசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல; மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.
தடுப்பூசியும் இல்லை. நோய் வந்தால், சிகிச்சைக்கு மருந்தும் இல்லை என்ற நிலையில், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.
மத்திய அரசும், மாநில அரசும், மக்களை கை கழுவி விட்டன. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என, சொல்லி விட்டார்கள். சுகாதார உதவியும் இல்லை; பொருளாதார உதவியும் இல்லை; தார்மீக உதவிகளும் இல்லை என்ற நிலையில் மக்களை, மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு விட்டன. கொரோனா முற்றிலுமாக, எப்போது ஒழியும் என்பது தெரியாது.


தாரகமந்திரம்


கொரோனா ஒழிந்தாலும், அதனால் ஏற்பட்டு உள்ள சமூக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து, இந்த நாடும், நாட்டு மக்களும் மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் பேசுகையில், ''காங்கிரசில் இருப்பதே பெருமை; காங்கிரசை வளர்ப்பதே கடமை என, முழங்கி வந்த வசந்தகுமாரின் தாரகமந்திரத்தை, நாங்கள் என்றும் கடைப்பிடிப்போம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay - Bhavani,இந்தியா
12-செப்-202023:13:45 IST Report Abuse
Jay ஒரு கோடி திமுக தொண்டர்களை வீட்டிற்குள் ஒரு வாரம் இருக்க சொன்னால் கொரணா தமிழகத்தில் கட்டுக்குள் வரும். அத சொல்றதுக்கு நீங்க ரெடியா?
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202022:08:29 IST Report Abuse
Krishna karuthu ellam paarthinganna standard aaga boli peyaril desa virodha moorga kootam oru kilo arisikku madham maariya soriyarist karuppar kootam mudiyadha vidiyadha tasmac paamaran Aapu tholvi kodi kattiya kondan anna vazhi Hindhukkalidam eemara mattom ivargal mattume Thennagathu Komali sudalai khan vada Indhia komali pappu khan china pak indha naalukkum veri pidithu muttu kodukkirargal.Desa virodham Modi Bayam ivargalai ulara vaikkudhu.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
12-செப்-202022:02:34 IST Report Abuse
a natanasabapathy ஒப்பனை செய்துகொண்டு வீட்டில் இருந்தபடி யாரோ எழுதி கொடுப்பாதை படிப்பவர் களுக்கு நாட்டு நடப்பு தெரியாது ஆட்டு மண்டை மக்கள் முக கவசம் அணிவதில்லை சமூக இடைவெளியை கடைபிடிப்பது Illai தெரு நாய்கள் போல் அலைந்து கொண்டு இருக்கின்றனர். அரசு சொல்வதை கேட்பதில்லை இவர்களை கடவுளாலும் காப்பற்ற முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X