அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவம்பரில் ரஜினியின் தனி கட்சி துவக்கம்?

Updated : செப் 13, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
நவம்பரில் ரஜினியின் தனி கட்சி துவக்கம்?

நவம்பர், 15ம் தேதிக்குள், புதுக்கட்சி துவக்கி, தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து, 'மைக்ரோ' செயல் திட்டங்களை வகுத்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில், 'ஆட்சி மாற்றம்; அரசியல் மாற்றம் தேவை; இப்போ இல்லையேல், எப்பவும் இல்லை; வாருங்கள் ஒன்றிணைவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில், ரஜினி ரசிகர்கள் ஒட்டினர்.
தொடர்ந்து, இது மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்படுவதை கண்டிக்கும் வகையில், ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி ஒருவர், 'நிர்வாகிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது; போஸ்டர் ஒட்டக்கூடாது' என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.
அதனால், ரஜினி கட்சி துவக்க மாட்டாரா என்ற சந்தேகம், ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், நவம்பர் 15ம் தேதிக்குள் கட்சி துவக்குவார் என்றும், 'மைக்ரோ' செயல் திட்டத்தை வகுத்து, தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்றும், அவருக்கு நெருக்கமானவர்கள், ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர்.

இது குறித்து, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:
ரஜினியின் மக்கள் மன்றங்கள், வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்தி என, ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார். ஒரு மண்டலத்திற்கு, எட்டு மாவட்டங்கள் என்ற அடிப்படையில், 40 மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.ஐந்து மண்டலங்களுக்கும் தலா, ஒருவர் வீதம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மண்டல வாரியாக மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய, செயல் திட்டங்கள், நலத் திட்ட பணிகள் குறித்து, ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளனர். அவற்றை தேர்தல் அறிக்கையாக வழங்க உள்ளனர்.
மண்டல வாரியாக, சமூகம் சார்ந்த அரசியல், அனைத்து மதத்தினரையும் ஆதரிக்கும் ஆன்மிக அரசியலை முன்னெடுத்துச் செல்லும் செயல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
கட்சி துவங்குவதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. தேதி அறிவிக்கப்பட்டு, மதுரையில் மாநாடு நடத்தப்பட உள்ளது.
கட்சி துவக்கிய, இரண்டு நாட்களில் பொறுப்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகள் துவக்கப்பட உள்ளன. கொரோனா பரவல் நீங்கி விட்டால், தமிழகம் முழுவதும் ரஜினி, சூறாவளி பிரசாரம் மேற்கொள்வார்.

கொரோனா தடுப்பு ஊசி வருவதற்கு தாமதமானால், தேர்தல் பிரசாரத்தை, ஐந்து மண்டலங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக மேற்கொள்ளவும், ரஜினி ஆலோசித்துள்ளார்.
ரஜினி முடிவு உறுதி என்பதால் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், 'இன்னும் எட்டு மாதங்களில், தி.மு.க., ஆளும் கட்சியாக இருக்கும்' என்றார்.
ஆனாலும், 'அந்த வெற்றியை, எளிதில் பெற முடியாது; அவ்வெற்றியை பெற, கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்' என்றார்.இவ்வாறு, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-செப்-202018:55:11 IST Report Abuse
Endrum Indian நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்திவ்வுலகு. இன்னும் குறைந்தது 46 நாட்கள் இருக்கின்றது
Rate this:
Cancel
K.ANBU - namakkal,இந்தியா
14-செப்-202016:55:01 IST Report Abuse
K.ANBU எனக்கு தெரிந்து ரஜினிக்கு எந்த திறமையும் இருப்பதாக தெரியவில்லை. சினிமாவில் கைய காலா ஆட்டி நடித்துவிட்டால் ஒரு நாட்டை ஆளும் திறமை வந்து விடுமா என்ன ?
Rate this:
Cancel
K.ANBU - namakkal,இந்தியா
14-செப்-202016:49:20 IST Report Abuse
K.ANBU இது ஒன்னு தான் குறைச்சல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X