5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டம் ; அமைச்சர் நிதின் கட்கரி

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி : அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.latest tamil newsஇந்திய பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை வலுப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய கட்கரி, நிதி ஆயோக்கின் முன்முயற்சியான "Arise Atal New India Challenge" என்னும் திட்டத்தை பாராட்டினார். வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பிரச்சினை களுக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், கூடுதல் ஆதாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. உபரி அரிசியை எத்தனால் உற்பத்தியில் பயன்படுத்தினால் இலாபம் அதிகம் கிடைக்கும். இதனால் சேமிப்பு கிடங்கில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனை குறையும் என்பதோடு, சுற்றுசூழலை மாசுபடுத்தாத எரிபொருளூம் நாட்டிற்கு கிடைக்கும் என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.


latest tamil newsமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) MSME பங்களிப்பை சுமார் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 49 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகவும் உயர்த்துவதே தனது குறிக்கோள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதுமை முயற்சி மேற்கொள்பவர் மற்றும் தொழில்முனைவோருக்கு, அதிக அளவில் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் போது,திறமையானவர்கள் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான புதுமை முயற்சிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க இந்த திட்டம் உதவும். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
12-செப்-202013:06:16 IST Report Abuse
cbonf ரசாயன விவசாயத்தை ஒழித்து பசு / காளை ஆதார விவசாயத்தை மாத்திரம் அனுமதியுங்க. ஒவ்வொரு வருடமும் 1 கோடி புதிய வேலைகள் உருவாகும். நாட்டு மக்களுக்கு நச்சில்லாத உணவு கிடைக்கும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-செப்-202012:17:56 IST Report Abuse
Bhaskaran புளுகுவதிலும் ஒரு அளவு வேண்டாமா
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
12-செப்-202011:40:44 IST Report Abuse
Amal Anandan ஏற்கனவே கொடுத்த ரெண்டு கோடி வேலை வாய்ப்புகளுக்கே ஆட்களை தேடவேண்டியிருக்கு இப்போ நாலு கோடியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X