பொது செய்தி

இந்தியா

5 வாலிபர்களையும் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கிறது சீனா

Updated : செப் 12, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து வாலிபர்கள், தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், இன்று(செப்.,12) இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில், சீன எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சில நாட்களுக்கு முன் மாயமாயினர். இவர்களை, சீன ராணுவத்தினர் பிடித்து சென்றதாக
China, handover, five Indians

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து வாலிபர்கள், தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், இன்று(செப்.,12) இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில், சீன எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சில நாட்களுக்கு முன் மாயமாயினர். இவர்களை, சீன ராணுவத்தினர் பிடித்து சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, நம் ராணுவத்தினர் அனுப்பிய 'ஹாட்லைன்' செய்திக்கு, சீன ராணுவம் பதில் அனுப்பியது.

மாயமான 5 வாலிபர்களும், தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சீன ராணுவம் கூறியுள்ளது. 'அவர்களை, நம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது' என, மத்திய அமைச்சர், கிரின் ரிஜிஜு கூறியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், 5 இளைஞர்களையும் இந்தியாவிடம் இன்று சீன ராணுவம் ஒப்படைக்க உள்ளது. வாச்சா அருகிலுள்ள கிபித்து எல்லையில், அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
12-செப்-202017:17:40 IST Report Abuse
mathimandhiri எதோ பேச்சு வார்த்தைக்கும், ராஜ தந்திரத்துக்கும் செவி சாய்த்து சீனன் இவர்களை விட்டு விட்டான் என்று நினைக்கக் கூடாது. அவன் இவ்வாறு லேசில் விடுகிறவன் இல்லை. அப்படியென்றால் இதில் நிச்சயம் ஒரு சூது ஒளிந்திருக்கும் என்று அடித்துச் சொல்லலாம். அந்த ஐவரையும் பல் துறை நிபுணர்கள் குழு அவர்கள் அறியாமல் ஆய்ந்து அறிய வேண்டும். தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். எல்லை பாது காப்பை இன்னும் தீவீர படுத்த வேண்டும். இல்லையெனில் சீனன் இதை ஒரு புது டெக்னிக் ஆக கொண்டு செல்லும் வாய்ப்பு மிக மிக அதிகம்.
Rate this:
Cancel
12-செப்-202013:03:50 IST Report Abuse
ருத்ரா இவர்களை தரோவாக செக் செய்ய வேண்டும். சிப்ஸ் உடலில் உள்ளதா என்றும் Brain wash செய்யப்படாமல் நார்மலாக உள்ளனரா? என்றும் பார்க்க வேண்டும். ஏழு அறிவையும் தாண்டிய சீன வைரஸ்கள்
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
12-செப்-202013:52:04 IST Report Abuse
RaajaRaja Cholanஎன்ன சிப்ஸ் சார், வாழைக்காய் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ்?. வேண்டாம் சார் அவர்களிடம் பிடுங்கி தின்றால் நன்றாக இருக்காது, அவர்கள் உடலில் என்ன சிப்ஸ் இருந்தாலும் ஒரு நாளில் ஜீரணித்து விடும் சார்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-செப்-202006:43:17 IST Report Abuse
sankaseshan சீனனை முழுவதும் நம்பக்கூடாது ஆபத்தானவன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X