23 மசோதாக்கள் - 11 அவசர சட்டங்கள் நிறைவேற்ற முடிவு

Updated : செப் 13, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பார்லி.,,23 மசோதாக்கள் தாக்கல்,திட்டம்!   நிறைவேற்றவும் முடிவு

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டதொடரில், 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில், கொரோனா பரவல் காரணமாக, எம்.பி.,க்கள் சம்பளத்தை, 30 சதவீதம் குறைப்பது உட்பட, 11 மசோதாக்கள், அவசர சட்டத்தை மாற்றுவதற்காக கொண்டுவரப்படும் மசோதாக்களாகும்.


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா பரவல் காரணமாக, திட்டமிட்டதற்கு முன், மார்ச், 23ல் முடிந்தது. அரசியல் சாசனப்படி, ஆறு மாத இடைவெளிக்குள், பார்லிமென்டை கூட்ட வேண்டும்.இதையடுத்து, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், லோக்சபா, ராஜ்யசபா செயலர்கள் உட்பட அதிகாரிகளுடன், பலமுறை ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்தனர். வரும், 14ம் தேதி முதல், அடுத்த மாதம், 1ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றிட திட்டமிட்டுள்ளது. இதில், 11 மசோதாக்கள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுகின்றன.


ஏழு ஆண்டு சிறைகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை தாக்கினால், ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டது.வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான நிதி திரட்டலுக்காக, எம்.பி.,க்கள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு, 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒரு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இவைகளுக்கு மாற்றாக, மசோதாக்கள் அறிமுகமாகின்றன.இவை தவிர, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக ஊக்குவிப்புக்காக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டு மானாலும் விற்பனை செய்யலாம் என்ற அவசர சட்டத்துக்கு மாற்றாகவும், மசோதா அறிமுகமாகிறது.
இப்படி, 23 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, மனிதக் கழிவுகளை மனிதர்களை அள்ளுவதை தடை செய்வதற்கான மசோதாவையும், மத்திய அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டத்தொடரின் முதல் நாளில், லோக்சபாவில், நடப்பு நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஓட்டெடுப்பும் நடக்கும். அதன்பின் வரும் நாட்களில், மற்ற மசோதாக்கள் அறிமுகமாகும்.லடாக் எல்லையில், கடந்த ஜூன், 14ம் தேதி நள்ளிரவு, சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர்கள், 20 பேர் உயிர் தியாகம் செய்தனர்.விவாதம்


இதைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, இந்திய பகுதிகளை சீன ஆக்கிரமித்துவிட்டதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.இந்நிலையில், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், சீன விவகாரம் குறித்து, குறைந்த நேரம் விவாதம் நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இந்த பிரச்னை பற்றி, எம்.பி., ஒருவர் முதலில் கேள்வி எழுப்புவார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் பேசுவர். முடிவில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்மழைக்கால கூட்டத்தொடருக்காக, ராஜ்யசபாவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி, ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் கூறியதாவது:எம்.பி.,க்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், இருக்கைகள் போடப்பட்டுள்ளன. எம்.பி.,க்கள் இருக்கைகளில், 'மைக்ரோ போன்' வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தே பேசவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.பி.,க்கள் வருகை பதிவேடு புரட்டி கையெழுத்திடுவதை தவிர்க்கும் வகையில், 'மொபைல்' செயலி வழியாக, வருகையை பதிவு செய்ய, வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், காலையில், ராஜ்யசபா கூட்டத்தையும், மதியம், லோக்சபா கூட்டத்தையும் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 நாட்களும் விடுமுறையின்றி, இரு சபைகளும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெங்கையாவுக்கு கொரோனா பரிசோதனைபார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு, 72 மணி நேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என, எம்.பி.,க்கள் அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பார்லி., வளாகத்தில், மூன்று கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.எம்.பி.,க்கள், இந்த மையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ பரிசோதனை மேற்கொண்டு, தங்களுக்கு தொற்று இல்லை என, டாக்டர் வழங்கிய சான்றிதழை, லோக்சபா அல்லது ராஜ்யசபா செயலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.எம்.பி.,க்கள் மட்டுமின்றி, பார்லிமென்ட் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று கொரோனா பரிசோதனை
செய்து கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-செப்-202021:17:57 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கொண்டுவாருங்கள் .அப்படியே கூட்டணி செயல்பாட்டிற்கு முற்றுபுள்ளா வைக்கும் மசோதா கொண்டு வாருங்கள் .தனித்தனியாக செயல்பட்டு வாக்கை பெறட்டும். தேர்தல்செலவென சப்போட்டென பணம் பறிக்க உள்ள துக்கடா கட்சிகள் அகற்றப்படவேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-செப்-202006:09:22 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள், முப்பது சதவிகிதம் குறைப்பது போல் குறைத்து பிறகு ஏற்றுக்கொள்வார்கள் ஆகவே இது எந்த அளவுக்கு என்று நமக்கு தேவையில்லாத ஒன்று, முதலில் இவர்கள் அனைவரும் பல கோடிக்கு அதிபதிகள், இவர்கள் இலவசமாக மக்களுக்கு சேவையற்றலாமே, பென்சன் வாங்காமல் இருக்கலாமே, ? அப்படி இருந்தால் மக்கள் பாராட்டுவார்கள், உலகம் பாராட்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-செப்-202005:57:22 IST Report Abuse
blocked user தமிழக மக்கள் தேர்வு செய்து அனுப்பிய அந்த 39 மேதைகள் என்ன மாதிரியான கேள்விகளை கேட்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X