வேட்பாளர் குற்றப் பின்னணி :தேர்தல் ஆணையம் உத்தரவு

Updated : செப் 13, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (10+ 5)
Share
Advertisement
  வேட்பாளர் குற்றப் பின்னணி  :தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் கொடுப்பதற்கான கால வரையறையை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டியிடுவதை தடுப்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, இது குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீதான வழக்குகள் குறித்து, பிரசார காலத்தில் ஊடங்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும்' என, 2018ல், தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி, தற்போது தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, விளம்பரம் கொடுப்பதற்கான கால வரையைறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:

வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பின்னணி குறித்து, மூன்று முறை ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். முதல் விளம்பரத்தை, வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதிக்கு முந்தைய நான்கு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கான கடைசி தேதிக்கு பின், ஐந்து அல்லது எட்டு நாட்களுக்குள் இரண்டாவது விளம்பரம் கொடுக்க வேண்டும். அடுத்து ஒன்பதாவது நாளிலிருந்து, ஓட்டுப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வரையுள்ள காலத்தில், மூன்றாவது விளம்பரம் தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-செப்-202015:53:41 IST Report Abuse
பாமரன் மன்மோகன் சிங் ஆட்சியில் எல்லா அரசியல் வியாதிகளும் சேர்ந்து, ஒரு சட்டத்திருத்த முன்வடிவை பார்லிமென்ட்டில் கொண்டுவரும் முடிவை எடுத்தார்கள். அன்னைக்கு ராகுலுக்கு என்ன மூடோ தெரியலை நான்சென்ஸ் அப்படின்னு சொல்லிட்டு அந்த சட்ட முன்வடிவை பார்லிமெண்டுக்கு வெளியே வந்து கிழித்துப் போட்டார். அதனால் காங் பின்வாங்கி சட்டமாக்காமல் விட்டது. ராகுல் மட்டும் அன்னிக்கு அந்த மாதிரி நடக்காமல் இருந்திருந்தால், யோசிக்கவே கஷ்டமாயிருக்கு.
Rate this:
Cancel
R. NARAYANAN - chennai,இந்தியா
12-செப்-202013:07:46 IST Report Abuse
R. NARAYANAN அரசு பணிகளில் சேர போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம். அதைப்போல் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன் அதை காவல்துறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும் பரிசீலித்து வேட்பாளர் குற்றப்பின்னணி உள்ளவரா அல்லது இல்லாதவரா என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். வேட்பாளர் குற்றப்பின்னணி உள்ளவர் என்று தேர்வானதற்கு பின்னால் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட சான்றிதழ் அளித்த ஆட்சியர் மீதும் காவல் துறை அதிகாரி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
12-செப்-202009:33:14 IST Report Abuse
Chandramoulli 4500 வழக்குகள் கட்சியில் உள்ள பதவியில் உள்ள எம் பி , எம் எல் ஏ க்கள் நிலுவையில் உள்ளன. சுமார் 900 வழக்குகள் ஊழல் குற்றசாட்டு உள்ளவை . அரசியல் நிர்பந்தம் காரணமாக நிலுவையில் உள்ளன. முதலில் நீதிமன்றம் விரைவாக செயல்பட்டு நீதி வழங்கினால் தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் எல்லாம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாடில் உள்ளன . ஒரு பயனும் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X