பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

Added : செப் 11, 2020
Share
Advertisement

ராஜபாளையம்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.இம்முறையானது தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு நன்மையை கொடுத்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடினமாகவே உள்ளது.அரசும் இலவச புத்தகம் வழங்கி கல்வி தொலை காட்சி மூலம் பாடம் நடத்தி வருகிறது. இந்த முறையில் அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 50 சதவீதம் மாணவர்களே பயன்பெறுகிறார்கள்.

இந்நிலையை சரிசெய்ய ராஜபாளையம் என்.ஏ. மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி செயலர் கிருஷ்ண மூர்த்தி ராஜா மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கு ஆசிரியர்களை அனுப்பி சுழற்சி முறையில் தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்தி வருகிறார். இது மாணவர்கள் பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X