பொது செய்தி

தமிழ்நாடு

உணவகத்தில் தினமலர் மருத்துவ குறிப்புகள்

Added : செப் 11, 2020
Share
Advertisement

சிவகாசிமருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் நாளிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எத்தகைய தகவல்களாக இருந்தாலும்'டிவி' உள்ளிட்ட சாதனங்களில் பார்த்தால் அது அன்றன்றே மறந்து விடும். ஆனால் நாளிதழ்களில் படித்தால் அது எப்பொழுதும் மனதில் நிலைத்திருக்கும்.

மேலும் அதை பத்திரப்படுத்தி எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்பொழுது மீண்டும் எடுத்து படித்து கொள்ளலாம். அதிலும் தினமலர் நாளிதழ் மருத்துவம், கல்வி, விவசாயம், விளையாட்டு என ஒவ்வொரு தலைப்பிலும் அதிகளவில் தகவல்களை தாங்கி வெளி வருகிறது. தினமலர் நாளிதழை எந்த வயதினரும் விரும்பி படிக்கின்றனர். இதில் வரும் பல்வேறு பகுதிகளை பலர் சேகரித்து பத்திரப்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்து உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தை நடத்தி வரும் இயற்கை மருத்துவத்தில் நாட்டம் கொண்ட மாறன்ஜி தினமலர் நாளிதழில் வரும் மருத்துவம் சார்ந்த செய்திகளை பெரிய அளவில் பிரின்ட் எடுத்து லேமினேஷன் செய்து கடையில் ஒட்டி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X