சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்மாய் துார்வாரும் பணி கிராம மக்கள் எதிர்ப்பு

Added : செப் 11, 2020
Share
Advertisement

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கண்மாய் துார்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை என்று கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விளங்குளத்துார் கண்மாய் ரூ.81.50 லட்சம் மதிப்பீட்டில் துார்வாரும் பணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கியது.பணி ஆமைவேகத்தில் நடைபெறுவதாகவும் இதுவரை ஒரு அடி துாரம் கண்மாய் மண்ணை வெட்டி கரை மட்டும் பலப்படுத்தி உள்ளனர்.கிராம மக்கள் கூறியதாவது: கிராமத்தில் பலவருடங்களுக்கு பின்பு கண்மாய் துார்வாரும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது கண்மாய் துார்வாரும் பணி முறையாக நடைபெறாததால் கிராமமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்ததால் பணியாளர்கள் மணல் அள்ளும் இயந்திரத்தை எடுத்து சென்று விட்டனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிராமத்தில் நடைபெறும் பணியை ஆய்வு செய்ய வேண்டும். கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்,வரத்து கால்வாய் உட்பட பணிகளை முறையாக செய்ய வேண்டும் தவறும்பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X