பொது செய்தி

தமிழ்நாடு

பல்லாங்குழியான ராமேஸ்வரம் கோயில் சாலை

Added : செப் 11, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் ரதவீதி பல்லாங்குழி சாலையாக உள்ளதால், பக்தர்கள் சிரமத்துடன் தரிசனம் செய்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் ரூ.60 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக கோயில் ரதவீதி, கிழக்கு தெரு, நடுத்தெரு, வர்த்தகன் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் சாலையை தோண்டி, கழிவு நீர் தேங்கும் கான்கிரீட் உறை, குழாய் அமைத்து வருகின்றனர்.இத்தெருவில் உள்ள வீடு, லாட்ஜ், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கடத்தி செல்ல, பக்கவாட்டில் தோண்டி குழாய் இணைப்பு கொடுத்து, திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.

கோயில் ரதவீதியில் வீடுகள், லாட்ஜ்களுக்கு கழிவு நீர் குழாய் இணைப்பு பதித்த நிலையில், சாலை முழுவதும் சேதமடைந்து காட்சியளிக்கிறது.தரிசனத்திற்கு செல்லும் வயது முதிர்ந்த, பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, பக்தர்கள் நலன் கருதி ரதவீதி சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X