சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பலியாகும் மயில்கள்

Added : செப் 11, 2020
Share
Advertisement

-ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் குடியிருப்பு பகுதியில் மயில்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு பலியாகிறது.

ராமநாதபுரம் நகர், பட்டினம்காத்தான், கலெக்டர் அலுவலக வளாகம், ராமேஸ்வரம் ரோடு, அழகன்குளம், உத்திரகோசமங்கை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மயில்கள் சுற்றித் திரிகின்றன. போதிய தண்ணீர், உணவு கிடைக்காத பட்சத்தில் குடியிருப்புகள், விளை நிலங்களில் மயில்கள் உலா வருகின்றன.அப்போது சில விஷமிகளால் மயில்கள் தாக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் விளைநிலத்தில் தானியங்களை உட்கொள்ளும் போது பூச்சிமருந்து கலந்திருப்பதால் மயில்கள் பாதிக்கப்படுகின்றன.

நேற்று ராமேஸ்வரம் ரோடு தென்றல் நகர்,முனியசாமிகோயில் பகுதியில் 2வயதான ஆண் மயில்ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறையினர் பிரேதபரிசோதனை செய்து புதைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X