பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பது அவசியம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

புதிய வீடு கட்ட கட்டட அனுமதி பெறும் போதே வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்க வேண்டும். பெயரளவில் அதை அமைத்து பின் கண்டு கொள்வதேயில்லை. மழைநீர் சேமிப்பின் அவசியம் தெரியாதது தான் இதற்கு காரணம்.எப்படி சேகரிக்கலாம் மழைநீர் சேகரித்து பயன்படுத்த விரும்பினால் புது வீடு கட்டுபவர்கள் கட்டுமானத்தில் கூடுதலாக சில அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

வீடு கட்டும் பொறியாளரிடம் கூறினால் அவர் அதற்கான கட்டமைப்பை எங்கு அமைக்கலாம் என ஆலோசனை கூறுவனர். வீடு கட்டும் இடம், அமைப்பு, தரையின் தன்மைக்கும் ஏற்ப கட்டமைக்க கூறுவார்.புது வீடு கட்டும் வீட்டின் ஒரு அறையின் தரை தளத்துக்கு கீழோ அல்லது கட்டடம் போக மீதம் இடமிருந்தால் அந்த இடத்தில் ஒரு அறையை உருவாக்க வேண்டும். (செப்டிக் டேங் அருகில் இதை அமைக்க கூடாது). படுக்கை, ஹாலுக்குக் கீழோ இந்த தரைத்தள கீழ்நிலை தொட்டி அமைத்தால், அறைகள் குளிர்ச்சியாக இருக்கும்.

குடிநீராகும் மழைநீர்நாம் கட்டும் வீட்டில் உள்ள ஓர் அறையின் அளவுக்கு தரை தளத்துக்கு கீழ் அறை கட்டலாம். தரை தளத்தில் உள்ள அறை 10க்கு 10 என்றால் கீழே உள்ள தரைத்தளத்துக்கு கீழேயும் 10 க்கு 10 என்ற அளவில் கட்டலாம். அல்லது கட்டடத்துக்கு வெளியில் மீதம் இடமிருந்தால் அங்கும் கட்டலாம். கீழ்நிலை தொட்டிக்கு மாடியிலிருந்து மழைநீர் செல்லும்படி குழாய் பொருத்த வேண்டும். இந்த அமைப்பு கட்டடத்துக்கு வெளியேயிருந்து வந்து, மழைநீர் தரைதள கட்ட அமைப்பில் செல்லும்படி பெரிய குழாய் பதிக்க வேண்டும்.மழைநீர் கீழ்தள தொட்டிக்கு செல்லும் வழியில் கேட் வால்வு வேண்டும். மழை பெய்யும் போது முதலில் மாடியிலுள்ள துாசிகளுடன் மழைநீர் வெளியேறும்.

கேட் வால்வு மூலம் சிறிது நேரம் நீரை திறந்து துாசிகளை வெறியேற்றலாம். இந்த தண்ணீரை மேல்நிலை தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் இணைத்து குடிநீராக பயன்படுத்தலாம். குடிநீருக்காக மழை நீரை பயன்படுத்த விரும்பினால் அதற்காக தனி பிளாஸ்டிக் தொட்டி அமைக்க வேண்டும். கூடுதலாக ஒரு மோட்டர் இதற்கு பயன்படுத்த வேண்டும்.சுத்தமான மழைநீர்சுத்தமான மழைநீரை சுத்திகரித்து குடித்தால் அது சுவையாக இருக்கும். மழைநீரை சேமிப்பு தொட்டிகளில் தேக்கி முறையாக பராமரித்தால் புழு, பூச்சிகள் வராது. தண்ணீர் நிறைய இருக்கும் காலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பிளிச்சிங் பவுடர் போன்ற கிருமி நாசினி கலந்து பயன்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X