சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து

Added : செப் 11, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம் : தேசிய நெடுஞ்சாலையான ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் பகுதியாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், சனவேலி, மேல்பனையூர் பாலம் என ரோட்டில் அதிகளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன.அவ்வழியாக செல்லும் டூ வீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் 90 கி.மீ., வேகத்திற்கும் குறைவில்லாமல் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் மாடுகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது இப்பகுதியில் தொடர் கதையாக உள்ளது. எனவே சம்மந்தபட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி நிர்வாகம் தங்களது கட்டுப்பாட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட விவசாயி களுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X