பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு கதவுகளை அழகாக காட்டும் பெயின்ட் நிறங்கள்

Added : செப் 11, 2020
Share
Advertisement

வீட்டுக்குள் வரும் போது கதவுகளை தான் நாம் முதலில் பார்க்கிறோம். அந்த கதவுகளை சிறப்பாக அலங்கரித்தாலே பாதி வேலை முடிந்துவிடும். குறிப்பாக வீட்டு சுவர் நிறத்திற்கு எதிர் நிறத்தில் பளிச்சென பெயின்ட் அடித்தால் கதவுகள் தனியாக தெரியும்.மஞ்சள் கதவுபொதுவாக வீடுகளில் கதவு என்றாலே உட் பிரவுன் நிறத்தில் தான் பெயிண்ட் அடிக்கிறார்கள். பலரும் அடிக்கும் இந்த வண்ணம் தனித்துவமாக இருக்காது.

பளிச் நிறத்தில் அடிப்பது மொத்த வீட்டின் அழகையும் எடுத்து காட்டும்.மஞ்சள் மகிழ்ச்சிக்கான நிறம் என்பதால் வீட்டின் முன் கதவிற்கு அடித்தால் அந்த நிறத்தின் பாசிடிவ் எனர்ஜி வீடு முழுவதும் வரும். மஞ்சள் தேர்வு செய்யும் போது சுற்றிலும் செய்யப்படும் அலங்காரம் குறைவாக இருக்க வேண்டும். அதிக வண்ணங்கள், ஆடம்பர அலங்காரங்கள் இந்த நிறத்துக்கு பொருந்தாது. பச்சை, நீல கதவுபச்சை வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும், கண்களுக்கு குளிர்ச்சியானது.

வார்ம் கிரீன் நிறம் கொண்டு அதற்கு ஏற்ப வீட்டின் முற்றத்தை அலங்கரித்தால் அழகாக இருக்கும். உட்புறமும் பேஸ்டல் நிறத்தில் சுவர்களுக்கு பெயின்ட் அடித்தால் பச்சை நிறம் எடுப்பாக இருக்கும்.நீல நிறம் மனதிற்கு இதமான உணர்வை அளிக்கும். அதிலும் டீப் சீ புளூ என்று சொல்லப்படும் அடர் நீல நிறம் ஸ்டைலிஷ் தோற்றம் அளிக்கும்.சிகப்பு, டெனிம் கதவுசிகப்பு நிறம் துடிப்பு, ஆற்றல் மிக்க வண்ணமாக இருக்கிறது. நெருப்பை நினைவூட்டும் இந்த நிறம் வீட்டிற்கு அழகை தரும். பளிச்சென பார்ப்பவர்களின் கண்களை கவரும். டெனிம் புளூ, வெள்ளை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறமாக இருக்கும்.

இது வீட்டை வித்தியாசமான கோணத்தில் காட்டும். கண்களுக்கு இதமாக இருக்கும்.வெள்ளை, நீல நிறத்தில் உள் அல்லது வரவேற்பு கதவுகளுக்கு அடித்தாலும் வித்தியாசமாக இருக்கும். டெனிம் ப்ளூ, வெள்ளை நிறத்திற்கு காண்ட்ராஸ்ட் நிறமாக இருக்கும். இது வீட்டை வித்தியாசமான கோணத்தில் காட்டும். கண்களுக்கு இதமாகவும் இருக்கும். வெள்ளை மற்றும் நீல நிறத்தில் உள் அல்லது வரவேற்பு கதவுக்கு அடித்தாலும் வித்தியாசமாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X