பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை வியாபாரிகளுக்கு கடன்: 17, 18ல் சிறப்பு முகாம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:நடைபாதை வியாபாரிகளுக்கு நுண்கடன் திட்டத்தில் பயன்பெற, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம், மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசு, 7 சதவீத வட்டியில், 10 ஆயிரம் ரூபாய் மானியக்கடன் வழங்குகிறது. திருப்பூர் மாநகர பகுதியில், அடையாள அட்டை பெற்ற நடைபாதை வியாபாரிகள் மற்றும் கடந்த, மார்ச் 24ம் தேதிக்கு முன்பு வரை, அடையாள அட்டை பெறாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள், இக்கடன் உதவியை பெறமுடியும்.
தகுதியுள்ளவர்கள், அடையாள அட்டை, நலவாரிய அட்டை அல்லது சங்க அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களுடன், அவிநாசி ரோடு, ஏஞ்சல் ஓட்டல் எதிரேயுள்ள, மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் செயல்படும், நகர்ப்புற வாழ்வாதார மையத்தை அணுகலாம்.முதல், இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட வியாபாரிகள், வரும், 17ம் தேதி, 15 வேலம்பாளையம் மற்றும் தொட்டிபாளையம் மண்டல அலுவலகத்திலும், 3, 4வது மண்டலங்களில் உள்ள வியாபாரிகள், வரும், 18ம் தேதி நல்லுார் மற்றும் ஆண்டிபாளையம் மண்டல அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம்.
காலை 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை முகாம் நடைபெறும்.'முகாமில், பெறப்பட்ட விண்ணப்பம் பதிவு செய்து, வங்கிக்கடனுக்கு அனுமதி வழங்கப்படும். முகாமில் பங்கேற்க முடியாதோர், வேலை நாட்களில் உரிய ஆவணங்களுடன், சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை அணுகலாம். விபரங்களுக்கு, 0421 - 220 2315 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X