பொது செய்தி

தமிழ்நாடு

தனித்தேர்வர்களுக்கு கோவிட் பரிசோதனை: 15ம் தேதி வரை அவகாசம்

Added : செப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு (ஸ்கிரைப்) கொரோனா பரிசோதனை செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், தனித்தேர்வர்களுக்கு, வரும், 21ல் துவங்கி, 26ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு வரும், 21- 28 வரையிலும், பிளஸ் 1 வகுப்பிற்கு, வரும், 29 முதல் அடுத்த மாதம், 7ம் தேதி வரையிலும் தேர்வு நடத்தப்படுகிறது.முதல் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு, வரும் 21 முதல், 28 வரையிலும், 2ம் ஆண்டு தொடக்க கல்வி பட்டயத்தேர்வு வரும், 29 முதல், அக்., 7 வரையும், எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, வரும் 29 முதல் அக்., 5 வரையிலும் நடக்கிறது.
இத்தேர்வெழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மற்றும் சொல்வதை எழுத நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன், 'கோவிட் 19' பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், 0421 - 2971156 என்ற எண்ணிற்கு, செப்., 15க்குள் தொடர்பு கொள்ளலாம்.பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை தேர்வு மையத்திற்கு வரும்போது கட்டாயம் எடுத்துவர வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X