பொது செய்தி

தமிழ்நாடு

'கோவிட்' சிறப்பு நிதி குழுவினருக்கு வழங்கல்

Added : செப் 11, 2020
Share
Advertisement

அவிநாசி:உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு, கோவிட்-19, சிறப்பு நிதி வழங்கப்பட்டது.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, உடுமலைப்பேட்டை, பொங்கலுார், குண்டடம் ஆகிய, 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 122- ஊராட்சிகளில் செயல்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, அத்திட்டத்தின் சார்பில், அவிநாசி மற்றும் திருப்பூர் வட்டாரத்தில் சிறப்பாக செயல்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு, தலா, 1.5 லட்சம் ரூபாய், 'கோவிட்--19' சிறப்பு நிதியுதவி தொகுப்பாக வழங்கப்படுகிறது.
அதன்படி, அவிநாசி வட்டாரத்தில், 6 குழுக்கள், திருப்பூர் வட்டாரத்தில், 4 குழுக்கள் என, 10 குழுவினர்க்கு, 15 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கும் நிகழ்ச்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தில் உள்ள, அவிநாசி வட்டார மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
திட்ட இயக்குனர் கோமகன் (மகளிர் திட்டம்) முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ஹரிஹரன், வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் பழனிசாமி, இளம் தொழில் வல்லுனர் விவேகா சிபி, தொழில்நுட்ப வல்லுனர் இளையகுமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X