பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டம் தவிர்க்க முன்பதிவு: ஆதார் பதிய அலைய தேவையில்லை

Added : செப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஆதார் பதிவு மையங்களில், கூட்டம் சேர்வதை தவிர்க்க, 'ஆன்லைன்' மூலம், முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவையை பெற, ஆதார் விவரம் அவசியமாகிறது. ரேஷன் கார்டு, பத்திரப்பதிவு என, அனைத்து பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவல கங்களில், ஆதார் பதிவு மையங்கள் செயல்படுகின்றன.புதிய ஆதார் பதிவு, முகவரி மாற்றம், 'மொபைல்' எண் மாற்றம், பெயர் அல்லது முகவரி திருத்தம் போன்றவற்றுக்கான பதிவு, தினமும் நடந்து வருகிறது. மையங்களில் கூட்டம் சேர்வதை தவிர்க்க, 'டோக்கன்' முறை பின்பற்றப்படுகிறது.இருப்பினும், ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் சேர்வதை தவிர்க்க, முன்பதிவு செய்யும் நடைமுறை, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
www.ask.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, 'அப்பாயின்மென்ட்' என்ற பட்டனை 'கிளிக்' செய்து, முன்பதிவு செய்து கொள் ளலாம்.ஆதார் 'அப்பேட்' அல்லது புதிய பதிவு என, தனித்தனியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு, ஆதார் மையங்களில் முன்னுரிமை அளித்து பதிவு செய்யப்படும்.'க்யூ.ஆர்., கோடு' வசதியுடன், முன்பதிவு செய்ததற்கான, ஒப்புதல் ரசீதும் வழங்கப்படும். அதை எடுத்துச்சென்று, கூட்டத்தை தவிர்த்து, எளிதாக ஆதார் பதிவு செய்துகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X