பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு சமைக்க புதிய பாத்திரம்; ஒன்றிய அலுவலகத்தில் வழங்கல்

Added : செப் 11, 2020
Share
Advertisement
 சத்துணவு சமைக்க புதிய பாத்திரம்; ஒன்றிய அலுவலகத்தில் வழங்கல்

திருப்பூர்:திருப்பூர் ஒன்றிய பகுதியில் இயங்கும், 10 சத்துணவு மையங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சமையல் பாத்திரம் வழங்கப்பட்டது.
திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில், 'அம்மா' ஸ்கூட்டர் திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், பயனாளிகளுக்கு, நல உதவி வழங்கினார். பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த, 37 பயனாளிகளுக்கு, அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில், தலா, 25 ஆயிரம் ரூபாய் மானியத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
சத்துணவு திட்டத்தில், ஒன்றிய பகுதியில் உள்ள, 10 சத்துணவு மையங்களுக்கு தேவையான, சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. பட்டம்பாளையம், பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த, ஐந்து பயனாளிகளுக்கு, பசுமை வீடு கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது.பி.டி.ஓ.,கள் சாந்தாலட்சுமி, மணிகண்டன், ஒன்றிய துணை தலைவர் தேவிஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X