பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 33, தேனியில் 2 ; காய்ச்சல் இருந்தால் அனுமதி கிடையாது

Added : செப் 11, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வு 33 மையங்களில் நாளை (செப்.,13) நடக்கிறது. 15,033 மாணவர் பங்கேற்கின்றனர்.

காய்ச்சல் இருந்தால்அவர்களுக்குவேறு நாளில் தேர்வு நடத்தப்படும். நரிமேடு, திருப்பரங்குன்றம் கே.வி., மகாத்மா, டி.வி.எஸ்., மெட்ரிக், கே.எம்.ஆர்., உள்ளிட்ட பள்ளிகள், யாதவா, மன்னர், தியாகராஜர்பொறியியல் கல்லுாரி உட்பட 33 மையங்களிலும் தேனியில் மேரி மாதா பள்ளி, வேலம்மாள் பள்ளியிலும் நீட் தேர்வு நடக்க உள்ளது.மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடக்கிறது. சமூக இடைவெளி, தெர்மல் பரிசோதனை மற்றும் வழக்கமான சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். காலை 11:00 மணிக்கு மையத்திற்கு வரவேண்டும்.

ஒவ்வொருவரும் 50 எம்.எல்., 'சானிடைசர்' கொண்டுவர வேண்டும். கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட நோய்த் தடுப்பு பொருட்கள் மையத்திலேயே வழங்கப்படும்.தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஹம்சபிரியா கூறியதாவது: தேர்வுக்கான அனைத்து வழிகாட்டுதலும் 'ஹால் டிக்கெட்'டில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் 12 பேர் எழுதுவர். கவருக்குள் வைக்கப்பட்ட வினாத்தாள் அந்தந்த மாணவர் இருக்கையில் வைக்கப்படும். எழுதி முடித்த பின் விடைத்தாளை அந்த மாணவரே கவருக்குள் வைத்துவிட வேண்டும். அறைக்குள் யார் பொருட்களையும் யாரும் தொட்டுவிட முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெர்மல் பரிசோதனையில் காய்ச்சல் கண்டறியப்பட்டால்அவர்கள் தேர்வெழுத அனுமதி கிடையாது. அவர்களுக்கு வேறொரு நாளில்தனியாக தேர்வு நடத்தப்படும்.தேர்வு மையம் அமைவிடத்தை சரியாக அறிய 'ஹால்டிக்கெட்'டில் இந்தாண்டு 'ஹைபர் லிங்' என்ற புதிய வசதி உள்ளது. அதை அழுத்தினால் தெளிவாக தெரிந்துகொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X