சிக்கல் : திருநெல்வேலி நான்குநேரி வானமாமலை மடத்திற்கு பாத்தியப்பட்ட சிக்கல் அருகே கொத்தங்குளம் கிராமத்தில்ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயில் உள்ளது.
1 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் வளாகம் முழுவதும் அரிய வகை மரங்கள், மூலிகைக் செடிகள் நிறைந்த பூஞ்சோலையாக காட்சிதருகிறது.கோயில் பிரகாரம் முழுவதிலும் மா, பலா, வாழை, செண்பக மரம், கடம்ப மரம், நெல்லி, துளசி உள்ளிட்ட 120 மரங்கள் வளர்ந்துள்ளன. கோயில் அர்ச்சகர் சடகோபன் கூறியதாவது;2001ல் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் இன்று பசுமையுடன் காட்சி தருவது, பக்தர்களுக்கு மன நிறைவை தருகிறது. இங்கு வைணவப் பெரியவரானமணவாள மாமுனிவர் அவதரித்த ஸ்தலமாக விளங்கி வருகிறது.
அருகே உள்ள ஊரணியில் மழைநீர் சேகரிப்பால்நிலத்தடி நீர் உவர்ப்பு நீங்கி, நல்ல சுவையான நீர் கிடைக்கிறது போர்வெல் மூலம் கிடைக்கும் நல்ல நீரை பாய்ச்சி வருகிறோம். பிரகாரம் சுற்றும் பக்தர்களுக்குவனப்பகுதியில் நுழைந்தது போன்ற அனுபவம் கிடைத்து வருகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE