பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்தல்

Added : செப் 11, 2020
Share
மதுரை : 'பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 14 ல் மறியல் போராட்டம் நடத்தப்படும்,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார் .அவர் கூறியதாவது: கொரோனா ஊடரங்கிலும் ரேஷன்கடை பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர். எனவே மருத்துவக் குழு காப்பீடு திட்டத்தில்

மதுரை : 'பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 14 ல் மறியல் போராட்டம் நடத்தப்படும்,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்

.அவர் கூறியதாவது: கொரோனா ஊடரங்கிலும் ரேஷன்கடை பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர். எனவே மருத்துவக் குழு காப்பீடு திட்டத்தில் பணியாளர்களை சேர்க்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து கார்டுதாரர்களுக்கும் உணவுப்பொருட்கள் வழங்க ஏதுவாக கடைகளுக்கு நுாறு சதவீத பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இறக்குமதி கூலி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. எனவே செப்., 14 ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X